’மேஷம் முதல் மீனம் வரை!’ 12 ராசிக்காரர்களும் அதிர்ஷ்டமும் யோகமும் கிடைக்க அணிய வேண்டிய ராசிக்கற்கள் இதோ!
By Kathiravan V Oct 11, 2024
Hindustan Times Tamil
’மேஷம் முதல் மீனம் வரை!’ 12 ராசிக்காரர்களும் அதிர்ஷ்டமும் யோகமும் கிடைக்க அணிய வேண்டிய ராசிக்கற்கள் இதோ!
மேஷம் ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் உள்ளார். நிலம், தைரியம், வீரம், ரத்தம் ஆகியவற்றின் காரகத்துவம் பெற்ற கிரகம் செவ்வாய் ஆகும். செவ்வாய் பகவானுக்கு உரிய ராசி கல்லாக பவளம் உள்ளது.
ரிஷபம் ராசிக்கு அதிபதியாக சுக்கிர பகவான் உள்ளார். அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் ஆகியவற்றின் காரகத்துவம் கொண்ட கிரகம் ஆக சுக்கிர பகவான் உள்ளார். சுக்கிர பகவானுக்கு உரிய ராசிகல்லாக வைரம் உள்ளது.
மிதுனம் ராசியில் பிறந்தவர்கள் பச்சை மரகதம் கொண்ட மோதிரங்களை அணியலாம்.
கடகம் ராசிக்கு உரிய கிரகம் ஆக சந்திர பகவான் உள்ளார். சந்திர பகவானுக்கு உரிய ரத்தினமாக முத்து உள்ளது.
சிம்மம் ராசியின் அதிபதியாக சூரிய பகவான் உள்ளார். இந்த ராசிக்காரர்கள் மாணிக்கம் அணியும் போது மிகுந்த நன்மைகளை பெறலாம்.
கன்னி ராசிக்கு அதிபதியாக புதன் பகவான் உள்ளார். இவர்கள் பச்சை மரகத கற்கள் அணிவது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
துலாம் ராசிக்கு உரிய கிரகம் ஆக சுக்கிர பகவான் உள்ளார். வைர மோதிரம் அணிவதன் மூலம் சுக்கிரனின் அருளையும், ஆசியையும் பெற முடியும்.
விருச்சிகம் ராசிக்காரர்கள் சிவப்பு நிற பவளத்தை அணியும் அணியும் போது மிகுந்த நன்மைகளை பெற முடியும்.
குரு பகவானுக்கு உரிய கல்லாக மஞ்சள் நிற புஷ்பராகம் உள்ளது. இதனை அணியும் போது வாழ்கையில் ஏற்றமும், முன்னேற்றமும் உண்டாகும்.
மகர ராசிக்கு உரிய கிரகம் ஆக சனி பகவான் உள்ளார். உழைப்பு, நீதி, நேர்மை ஆகியவற்றின் அடையாளமாக சனி பகவான் உள்ளார். சனி பகவானுக்கு உரிய கற்களாக நீலக்கல் உள்ளது. நீலக்கல் அணிந்தால், பணவரவு, ஆரோக்கியம், புகழ், அதிர்ஷ்டம் ஆகியவற்றை கொடுக்கும்.
கும்பம் ராசியின் அதிபதியாக சனி பகவான் உள்ளார். மகரம் ராசியை போலவே கும்பம் ராசியினரும் நீலக்கல் அணிவதன் மூலம் நிதி சார்ந்த நன்மைகள், ஆரோக்கியம், புகழ், அதிர்ஷ்டத்தை பெற முடியும்.
மீனம் ராசிக்கு அதிபதியாக குரு பகவான் உள்ளார். ஒழுக்கம், பொலிவு, செல்வம் ஆகியவற்றின் காரகத்துவம் கொண்ட கிரகம் ஆக குரு பகவான் உள்ளார். இவர்கள் மஞ்சள் நிற புஷ்பராகம் அணிவதால் மேன்மைகளை அடையலாம்.
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளை பின்பற்றலாம் என்பது பற்றி பார்ப்போம்