நாள்தோறும் எவ்வளவு வாழைப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு போதிய அளவில் நன்மை கிடைக்கும் என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Apr 25, 2024

Hindustan Times
Tamil

அதிகம்பேரால் விரும்பி சாப்பிடக்கூடிய பழ வகையாக வாழைப்பழம் இருந்து வருகிறது. இதில் அதிக அளவில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இருப்பினும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரிக்கூடும் என்ற கருத்தும் நிலவி வருகிறது

சிறுநீரக நோய் பாதிப்பு இருப்பவர்கள் அதிகப்படியான பொட்டாசியம் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். அந்த வகையில் அளவுக்கு அதிகமாக வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பதன் மூலம் சிறுநீரக, இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்

அளவுக்கு அதிகமாக வாழைப்பழம் சாப்பிடுவதால் பொட்டாசியம் அளவு அதிகரித்து ஹைபர்கேமியா பாதிப்பு ஏற்படக்கூடும். இதனால் இதயம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம்

மற்ற ஊட்டச்சத்து உணவுகளை போல் சமச்சீரான விகிதத்தில் வாழைப்பழத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்

எடையை நிர்வகித்தல், இதய ஆரோக்கி யம் என பல்வேறு நன்மைகளை கொண்டதாக வாழைப்பழம் உள்ளது 

கார்ப்போஹைட்ரேட்கள், பி வைட்டமின்கள் வாழைப்பழத்தில் நிரம்பி இருப்பதால் ஆற்றலை தக்க வைக்க உதவுகிறது. இதில் இருக்கும் ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் புரதம் ரத்த சர்க்கரை அளவை நிலைப்படுத்துகிறது 

பசி உணர்வை கட்டுப்படுத்துவதன் மூலம் உடல் எடையை நிர்வகிக்க உதவுகிறது

நார்ச்சத்துக்கு சிறந்த ஆதாரமாக இருந்து வரும் வாழைப்பழம் செரிமானத்துக்கு உதவுவதோடு, வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது

இதில் இருக்கும் பொட்டாசியம் இதய ஆரோக்கியம், ரத்த அழுத்தத்தை சீராக வைத்து கொள்ள உதவுகிறது

ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் கொண்ட வாழைப்பழம் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து இதயம், டயபிடிஸ், புற்றுநோய் பாதிப்பை தடுக்கிறது