‘கனவுகள் பலிக்கும்! வாக்குகள் நடக்கும்!’ விசாக நட்சத்திரத்தின் பொதுப்பலன்கள்!

By Kathiravan V
Apr 30, 2024

Hindustan Times
Tamil

குரு பகவானின் மூன்று நட்சத்திரங்களில் ஒன்றான விசாகம் நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்கள் துலாம் ராசியிலும், நான்காவது பாதம் விருச்சிகம் ராசியிலும் உள்ளது. 

விசாகம் நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்கள் சுக்கிரன் ராசியான துலாம் ராசியில் விழுவதால் இந்த நட்சத்திரக்காரர்கள், பார்ப்பதற்கு படபடப்பாக இருப்பார்கள், விசாகம் குருவின் நட்சத்திரம் என்பதால் வேதம், சாஸ்திரங்களில் ஈடுபாடும், தெய்வ பக்தியும் இருக்கும்.

உறவினர்களிடம் அன்பாக நடந்து கொள்ளும் பண்பை பெற்ற இவர்களின் பேச்சு சாதூர்யமானதாக இருக்கும். இவர்களுக்கு சில இடங்களில் கர்வம் வெளிப்பட்டாலும், எப்போதும் எளிமையாக பேசுவார்கள்.

இவர்களுக்கு வரும் கனவுகள் பலிக்க கூடியதாக இருக்கும், இவர்களின் வாக்குகள் பலிதம் ஆகும். இவர்களுக்கு கல்வி அறிவு குறைவாக கூட இருக்கலாம் ஆனால் உலக அறிவை பெற்றவர்களாக விளங்குவார்கள். யாரையும் முழுமையாக நம்பாத இவர்களுக்கு சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, சனி தசை; சனிபுத்தி, கேது தசை; கேது புத்தி, சூரிய தசை; சூரிய புத்தி, செவ்வாய் தசை; செவ்வாய் புத்தி, ராகு தசை; ராகு புத்தி ஆகியவை நிறைய நன்மைகளை செய்யும்.

முருகப்பெருமான் அவதரித்த நட்சத்திரமாக விசாகம் உள்ளது. இவர்களுக்கு முதல் தசையாக குரு மகா தசை நடக்கிறது.

கால் அற்ற நட்சத்திரமான விசாகம், ராட்சர கணத்தை சார்ந்து உள்ளது. பெண் நட்சத்திரமான விசாகத்திற்கு உரிய நட்சத்திரமாக பெண் புலி உள்ளது. இவர்களின் விருட்சமாக விலா மரமும், பறவையாக செங்குருவியும் உள்ளது.

உடலுக்கு குளிர்ச்சியை தருவதுடன், கோடைகாலத்தில் கிடைக்ககூடிய பழமாக இருந்து வரும் ஃபால்சாவில் இருக்கும் உடல் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்