உடலுக்கு குளிர்ச்சியை தருவதுடன், கோடைகாலத்தில் கிடைக்ககூடிய பழமாக இருந்து வரும் ஃபால்சாவில் இருக்கும் உடல் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman May 17, 2024
Hindustan Times Tamil
ஃபால்சா பழம் தமிழில் தடச்சி பழம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பழத்தின் கூழில் இருந்து சர்பத் அல்லது ஸ்குவாஷ் தயாரிக்கப்பட்டு, உடலுக்கு குளிர்ச்சியை தரும் பொருளாக பயன்படுத்தப்படுகிறது
வைட்டமின்கள் நிறைந்திருக்கும் இந்த பழம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாக உள்ளது
பல்வேறு வைட்டமின் சத்துக்களும், தாதுக்களும் நிறைந்திருக்கும் இந்த பழம் எளிதாக செரிமானம் அடையக்கூடியதாக இருக்கிறது
இந்த பழத்தில் இருக்கும் சேர்மானங்கள் ரத்த குளுகோஸ் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது
ஆன்டிஆக்ஸிடன்ட், அழற்சிக்கு மற்றும் புற்றுநோய்க்கு எதிரான பண்புகள் கொண்டிருக்கும் இந்த பழத்தில் பல்வேறு மருத்துவ குணங்களும், உடலை குளிர்ச்சிபடுத்த கூடிய தன்மையும் உள்ளது
வைட்டமின் சி, மெக்னீசியம், பொட்டசியம், கார்ப்போஹைட்ரேட், இரும்பு சத்து என பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன
இதில் இருக்கும் இரும்புசத்துக்கள் ரத்த சோகை பிரச்னைக்கு தீர்வு அளிக்கிறது. இதை அடிக்கடி சாப்பிட்டால் மயக்கம், சோர்வு பாதிப்புகள் நீங்கும்
பாக்டீரியாவுக்கு எதிரான செயல்படு ஃபால்சா எலும்பு வலிகளுக்கு தீர்வு அளிக்கிறது
இது தெரிஞ்சா பீட்ரூட்டை மிஸ்பண்ணவே மாட்டீங்க.. 5 அற்புத நன்மைகள் இதோ!