குழந்தை ராமர் முதல் ராமர் தர்பார் வரை! அயோத்தி கோயிலின் அறியப்படாத சிறப்புகள்!

By Kathiravan V
Jan 17, 2024

Hindustan Times
Tamil

வரும் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இந்த ஆலயம் முற்றிலும் நாட்டின் பாரம்பரிய மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது.

ராமர் கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்ட சன்னதியாகும், ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. இது மொத்தம் 392 தூண்களையும் 44 கதவுகளையும் கொண்டுள்ளது 

அயோத்தியில் ராமர் கோவிலுக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் யானைகள், சிங்கங்கள், ஹனுமான் மற்றும் கருடன் சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் பன்சி பஹர்பூர் பகுதியில் இருந்து பெறப்பட்ட மணற்கல்லைப் பயன்படுத்தி இந்த சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய கட்டட கலை பாணியான நாகரா பாணியில் கட்டப்பட்ட கோவில் வளாகம், 380 அடி நீளம், 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டது.

கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்களைக் கொண்டிருக்கும்

நிருத்திய மண்டபம், ரங் மண்டபம், சபா மண்டபம், பிரார்த்தனா மண்டபம், கீர்த்தனை மண்டபம் ஆகிய ஐந்து மண்டபங்களை கோயில் கொண்டுள்ளது. 

கோவிலின் கருவறையில், தெய்வம் பிரதிஷ்டை செய்யப்படும். இந்த கருவறையில் குழந்தை ராமர் (ராம் லல்லா)  சிலை இருக்கும், அதே நேரத்தில் முதல் தளத்தில் ஸ்ரீ ராம் தர்பார் இருக்கும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

தூண்கள் மற்றும் சுவர்களை அலங்கரிக்கும் வகையில் தெய்வ உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

சன்னதியின் பிரதான நுழைவாயிலுக்கு செல்ல 32 படிக்கட்டுகளை ஏறி செல்ல வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் வசதிக்காக வளைவுகள் மற்றும் லிப்ட்கள் வழங்கப்பட்டுள்ளன

இந்த கோயில்  732 மீட்டர் நீளமும் 14 அடி அகலமும் கொண்ட பார்கோட்டா (செவ்வக வடிவ சுவரால்) சூழப்பட்டுள்ளது

கோயிலின் அடித்தளம் 14 மீட்டர் தடிமன் கொண்ட ரோலர்-காம்பாக்ட் செய்யப்பட்ட கான்கிரீட் (RCC) அடுக்குடன் கட்டப்பட்டுள்ளது, இது செயற்கை பாறையின் தோற்றத்தை அளிக்கிறது.

கோயிலுக்கு அருகில் பண்டைய காலத்தைச் சேர்ந்தது.சீதா கூப் உள்ளது 

30 வயது அடைந்துவிட்டால் உடலுக்கு தேவையான அடிப்படை ஊட்டச்சத்துகள் எவை என்பதை பார்க்கலாம்