’சனி பகவானின் வக்ர நிலை!' அக்டோபர் மாதம் வரை அள்ள அள்ள பணத்தை எடுக்க போகும் 3 ராசிகள்!

By Kathiravan V
Aug 21, 2024

Hindustan Times
Tamil

ஜோதிடத்தை பொறுத்தவரை ஒருவரது செயல்பாடுகளை சீர்த்துக்கி பார்த்து அதற்கு ஏற்ற பலன்களை தரக்கூடிய நீதிமானாக சனி பகவான் விளங்குகிறார். நாம் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்பவே அவரது பலன்கள் இருக்கும்.  சனி பகவானின் தாக்கம், நம்மை கடினமாக உழைக்கவும், பொறுமையாக இருக்கவும் கற்றுத்தருகிறது. 

பல விதமான தொழில்களுக்கு காரக கிரகமான சனி பகவான் நீதி தவறாத பண்பு உடையவர் ஆவார். ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் வரை வாசம் செய்யும் சனி பகவான் அந்த ராசிக்காரருக்கு மிகப்பெரிய வாழ்கை அனுபவத்தை வழங்க கூடிய கிரகமாக உள்ளார். கால புருஷனான 10 ஆவது வீடு எனும் தொழில் ஸ்தானமும், 11ஆவது வீடான லாப ஸ்தானமும் இவரது ஆட்சி வீடாக உள்ளது. கால புருஷனின் 7ஆம் வீடு எனும் சமுதாய ஸ்தானம் இவருக்கு உச்ச வீடு ஆகும்.

ஜோதிட சாஸ்திரத்தை பொறுத்தவரை மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக சனிபகவான் உள்ளார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு அவர் இடம் பெயர இரண்டரை ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்கிறார். தற்போது சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பம் ராசியில் வக்ரம் பெற்று உள்ளார். 

கடந்த ஜூன் 19ஆம் தேதி கும்பம் ராசியிலேயே வக்ரம் பெற்ற நிலையில் சனி பகவான் உள்ளார். வக்ர சனி தொடங்கி உள்ள நிலையில் நவம்பர் 4ஆம் தேதி வரை சனி பகவான் வக்ர நிலையில் இருப்பார். இதன் மூலம் பலன் அடையும் ராசிகளை தற்போது பார்க்கலாம்.

மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் நிலை மிகவும் சாதகமாக உள்ளது. சனியின் அருளால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய வருமானம் கிடைக்கும். உங்கள் கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்கள் நல்ல பலன்களைப் பெறலாம். திடீர் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

கடக ராசிக்காரர்களுக்கு சனியின் நிலை மிகவும் சுபமாக இருக்கப் போகிறது. சனியின் தாக்கத்தால் நல்ல வருமானம் கிடைக்கும். மாணவர்களுக்கு இது நல்ல காலமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் பணிகளுக்கு ஏற்ற வெகுமதிகள் கிடைக்கும். இந்த நேரம் வியாபாரிகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். மக்கள் உங்களால் ஈர்க்கப்படுவார்கள். கல்விப் பணியில் மரியாதை பெறுவீர்கள். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

மகரம் ராசிக்காரர்களுக்கு சனியின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். பணம் சம்பாதிக்க புதிய வழிகள் புலப்படும். பணவரவு நன்றாக இருக்கும். உங்கள் நிதி நிலை மேம்படும். இந்த காலகட்டத்தில், நீங்கள் நீதிமன்றத்தில் வெற்றி பெறலாம். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

உங்கள் எடை குறைப்பு பயணத்திற்கு உருளைக்கிழங்கு நல்லதா அல்லது கெட்டதா?