பிரபல இயக்குநர் வெற்றி மாறனின் மனைவி ஆர்த்தி வெற்றிமாறன் . பல வருடங்களாக வெற்றிமாறனை காதலித்து வந்த இவர், வீட்டின் எதிர்ப்பையும் மீறி அவரை திருமணம் செய்து கொண்டார். இவர் வெற்றிமாறனுக்கும் தனக்கும் இடையே காதல் பூத்த கதையை பகிர்ந்து இருந்தார்.
By Kalyani Pandiyan S Nov 28, 2024
Hindustan Times Tamil
இது குறித்து ஸ்பாட்லைட் யூடியூப் சேனலுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கொடுத்த பேட்டியில்," வெற்றிமாறன் என்னிடம், படம் எடுப்பதற்கு பத்து வருடங்கள் ஆகும் என்று சொன்னபோது என் மண்டைக்குள் ஏறவே இல்லை.
அது அப்படியான வயது. அவர் இப்படி என்னிடம் சொன்னது 97, 98 காலகட்டம் ஆகும். அப்போது படம் எடுப்பதில் இவ்வளவு கஷ்டம் இருக்கும் என்றெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு படங்கள் என்றால், ரஜினி கமல் படங்கள் தான் தெரியும்.
எனக்கு கமலை மிகவும் பிடிக்கும். வெற்றி யுடன் சேர்ந்த பிறகு தான் இயக்குநர்கள் அறிமுகமானார்கள்.
இயக்குநர்களை பார்த்து படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். ஆனால், நான் இவரை தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் மிக மிகப் பிடிவாதமாக இருந்தேன். நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டு, இத்தனை வருடங்கள் ஆகிவிட்டது. இந்த நேரத்தில், நான் இதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஒருவருக்காக 8 வருடங்கள் 10 வருடங்கள் காத்திருப்பது என்பது பெரிய விஷயமே இல்லை. நாம் காதலிக்கும் பொழுது ஒருவரை ஒருவர் சந்திப்போம்..அதன் பின்னர் அவர் அவர் வீட்டுக்கு சென்று விடுவோம்.
அந்த சமயத்தில் இருவருக்கும் இடையே ஒருவித இடைவெளி உருவாகும். அப்போது நாம் யோசிப்பதற்கு அதிக அளவு நேரம் கிடைக்கும்.
இதற்கிடையே என்னுடைய வீட்டில் எனக்கு கல்யாணம் செய்து வைப்பதற்கான வேலைகளை மும்மரமாகசெய்து கொண்டிருந்தார்கள்.
அந்த சமயத்தில் எனக்கு வீட்டில் காதலை சொல்வதற்கு தைரியம் இல்லை. ஆனால் நான் ஒரு கடிதம் எழுதி நான் வெற்றிமாறனை காதலிக்கிறேன் என்றும் கல்யாணம் செய்தால் அவரை மட்டுமே கல்யாணம் செய்வேன் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தேன்
இதனை யடுத்து வெற்றிமாறனுக்கு படம் எடுப்பதற்கான வாய்ப்பு வந்தது. அட்வான்ஸ் தொகையாக பத்தாயிரம் ரூபாய் கொடுத்தார்கள். இதனையடுத்து அவர் என்னிடம் வந்து அட்வான்ஸ் கொடுத்து விட்டார்கள். கல்யாணத்திற்கு வீட்டில் பேசிவிடு என்றார்
இதனை தொடர்ந்து நான் வீட்டில் பேசினேன். கல்யாணத்திற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தது. ஆனால் இவர் இயக்குவதாக இருந்த திரைப்படம் ட்ராப் ஆவதாக அறிவிப்பு வெளியானது.
அதனால் வெற்றிமாறன் கல்யாணத்தை நிறுத்திக் கொள்ளலாம் என்றார். நானும் ஓகே என்று சொல்லிவிட்டேன். ஆனால் அவர் அம்மாவிடம் இல்லை கல்யாணம் செய்து கொள்ளே ஆக வேண்டும் என்று வற்புறுத்த கல்யாணம் செய்து கொண்டார்
ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் நடை பயிற்சி மேற்கொண்டால் உடலின் பல தொல்லைகள் நீங்கும் எனக் கூறப்படுகிறது.