மகரம் ராசிக்குள் நுழையும் சுக்கிரன்! இனி எல்லாமே மாறுது! காதல்! காமம்! பணத்தில் திளைக்க போகும் 5 ராசிகள்!

By Kathiravan V
Nov 22, 2024

Hindustan Times
Tamil

நவகிரகங்களில் அசுர குரு எனப்படும் சுக்கிர பகவானுக்கு தனி இடம் உண்டு. பொருள் சேர்க்கை, திருமணம், மகிழ்ச்சி, கலை, திறமை, அழகு, காதல், காமம், ஆடைகள், அலங்காரம், ஆபரணங்கள் ஆகியவற்றின் காரகத்துவம் கொண்ட கிரகமாக சுக்கிரன் உள்ளார்.

ஜோதிடத்தில், கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கிரகங்களின் இயக்கம் மாறுவது அனைத்து ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது.

வரும் டிசம்பர் மாதம் 2ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் மகரம் ராசிக்குள் நுழைகிறார்.  மகரம் ராசியின் அதிபதியான சனி பகவானின் நட்பு கிரகமாக சுக்கிர பகவான் உள்ளார்.

மகரம் ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் சில ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும். பொருள் இன்பம் பெருகும். சுக்கிரன் சஞ்சாரத்தின் பலன் எந்த ராசிக்காரர்களுக்கு பலன் தரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

சுக்கிரன் சஞ்சாரம் காரணமாக மேஷ ராசிக்காரர்களுக்கு பண லாபம் உண்டாகும். செல்வாக்கு மிக்கவர்களை சந்திக்க நேரிடும். தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம். வெளியூர் மற்றும் வெளிநாடு பயண வாய்ப்புகள் உண்டு. வியாபாரத்தில் விரிவாக்கம் செய்வீர்கள். செல்வாக்கு மிக்கவர்களை சந்திக்க நேரிடும். இல்லற வாழ்கையில் சுகம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும். 

மகர ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் செய்வது ரிஷப ராசிக்காரர்களுக்கு நன்மைகளை கொடுக்கும். சிலரது நீண்ட நாள் கனவுகள் நனவாகும். சிலருக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் உண்டாகும். வியாபாரம் செய்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். பேச்சில் இனிமை இருக்கும். செல்வாக்கு மிக்கவர்களை சந்திக்க நேரிடும். இல்லறம் மகிழ்ச்சியாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சஞ்சாரப் பலன் காரணமாக வேலையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டில் பணவரவு பெருகும். புதிய வேலைகளைத் தொடங்க இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். வாழ்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இல்லறம் மகிழ்ச்சியாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும்.

சுக்கிரன் மகர ராசிக்கு மாறுவது துலாம் ராசிக்காரர்களுக்குப் பொன்னான நேரத்தையும், வாய்ப்புகளையும் கொண்டு வரும். வாழ்க்கையில் மகிழ்ச்சி வந்து சேரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் வருமான உயர்வு உண்டாகும். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். இல்லறம் மகிழ்ச்சியாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும்.

மகர ராசிக்காரர்கள் சுக்கிரன் சஞ்சாரத்தின் தாக்கத்தால் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் காண்பார்கள். கடின உழைப்பு நற்பலன்களை கொடுக்கும். பணியில் இருந்த தடைகள் நீங்கும். தொழிலதிபர்கள் பொருளாதார ரீதியாக லாபம் அடைவார்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இல்லறம் மகிழ்ச்சியாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும்.

குளிர்காலத்தில் மட்டுமே காணப்படும் உயர் இரத்த அழுத்தத்தின் 5 அறிகுறிகள்