'மழை பெய்வதை முன்கூட்டியே கணிப்பது எப்படி?' ஜோதிடர் சொல்லும் எளிய தகவல்

By Kathiravan V
Nov 14, 2023

Hindustan Times
Tamil

நவக்கிரகங்களில் சுக்கிரன் மழைக்கு காரகன் ஆவார்.அதேபோல் சந்திரன் குளிர்ச்சிக்கு காரகன் ஆவார்.மழை பொழிவதற்கும் சில கிரக சேர்க்கைகளுக்கும் தொடர்பு உள்ளது  இதை நம் முன்னோர்களும், ரிஷிகளும் நமக்கு அறிவுப் பொக்கிஷமாக அளித்துள்ளார்கள் என்கிறார் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன் 

சுக்கிரனும், புதனும் சூரியனுக்கு முன்னும், பின்னும் எப்பொழுதும் சுற்றி வரும். சூரியன், புதன், சுக்கிரன் மூன்றும் ஒரே ராசியில் இருந்தால் மழை பொழியும். அவை மூன்றும் ஒரே நவாம்சத்தில் இருந்தால், பலத்த மழை பெய்யும். இராசியும், நவாம்சமும் நீர் சம்பந்தப்பட்டதாக இருந்தால் (கடகம், விருச்சிகம், மீனம்) மிக பலத்த மழை பொழியும். அதற்கிணங்கவே மழையைத் தீர்மானிக்க வேண்டும். 

சுக்கிரனும், புதனும் ஒரே இராசியிலும், ஒரே நவாம்சத்திலும் இருந்து, சுக்கிரன் செவ்வாய்க்குப் பின்னால் இருந்தால், அதிகமான மழை பொழியும். 

சூரியன், பூமி சம்பந்தப்பட்ட இராசியில் (ரிஷப, கன்னி இராசிகள்)  இருந்தும், சந்திரன், புதன், சுக்கிரன் நீர் சம்பந்தப்பட்ட இராசி, நவாம்சதிலும் இருந்தும், அந்த சமயத்தில் மேற்கே வானவில் தென்பட்டாலும், நிறைய மழை பொழிவு இருக்கும். 

மழைக் காலங்களில், மேற்கே வானவில் எப்பொழுது தோன்றினாலும், மழை தொடர்ந்து பெய்யும் வாய்ப்பு உண்டு. வானவில் கிழக்கில் தென்பட்டால் மழை நிற்கப்போகிறது என்று அர்த்தம்.

சங்க கால தமிழ் இலக்கிய பாடல்கள் பலவற்றில், சுக்கிரன் தெற்கில் நகர்ந்து கொண்டிருந்தால், அங்கு வறட்சி ஏற்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. வானத்தைப் பல ஆண்டுகள் கவனித்து இது   சொல்லப்பட்டதாகும்.

க்ராந்தி என்பது பூமத்திய ரேகைக்கு 24 டிகிரி  வரை  வடக்கிலும், 24 டிகிரி வரை  தெற்கிலும்  உள்ள வானில் உள்ள பிரதேசம். கிரகங்கள் இந்தப் பிரதேசத்தில் மேலும் கீழுமாக சஞ்சரித்துக் கொண்டு இருக்கும்

பொதுவாக, எந்த ஒரு கிரகமுமே, வடக்கு க்ராந்தியில் சஞ்சரித்தல் நன்மை பயக்கும் என நம்பலாம். 

நவம்பர் 26-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்