வீட்டில் இருந்தபடியே பணிபுரிபவர்களுக்கான சில பயனுள்ள டிப்ஸ்
By Manigandan K T May 17, 2023
Hindustan Times Tamil
பணி நேரத்தில் போன் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள். இதனால், தினசரி பணி இலக்குகளை எளிதில் நிறைவேற்ற முடியும்
லேப்டாப் வைக்கும் மேஜையை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். இது பாசிட்டிவான எண்ணங்களைக் கொடுக்கும்.
தேவைப்படும்போது 5 நிமிடங்களாவது பிரேக் எடுத்துக் கொள்ளுங்கள்.
சார்ஜ் செய்து கொண்டே இல்லாமல் தேவைப்படும்போது லேப்டாப்பிற்கு சார்ஜ் போடுங்கள்
போதிய வெளிச்சம் இருக்கும் இடத்தில் அமர்ந்து பணியைச் செய்யுங்கள்
anti glare glasses பயன்படுத்துங்கள். இதனால், லேப்டாப்பில் இருந்து வரும் ஒளியிலிருந்து நமது கண்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்
பயன்படுத்தாத சமயத்தில் லேப்டாப்பை லாக் செய்து விட்டு செல்வது நல்லது. இதனால், குழந்தைகள் தெரியாமல் லேப்டாப்பில் ஏதாவது பட்டனை அழுத்தினாலும் ஒன்றும் ஆகாது.
ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் நடை பயிற்சி மேற்கொண்டால் உடலின் பல தொல்லைகள் நீங்கும் எனக் கூறப்படுகிறது.