ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் நடை பயிற்சி மேற்கொண்டால் உடலின் பல தொல்லைகள் நீங்கும் எனக் கூறப்படுகிறது. 

By Suguna Devi P
Dec 03, 2024

Hindustan Times
Tamil

அதிலும் சாப்பிட்ட பின்னர் ஒரு 10நிமிடம் நடைபயிற்சி மேற்கொண்டால் பின்வரும் பலன்களை அடையலாம். 

சாப்பிட்ட பின் தூங்குவது உடல் நலத்திற்கு கேடு. உணவு சரியாக செரிக்காமல் மலச்சிக்கல், அமிலத்தன்மை, வாயு போன்ற பிரச்சனைகளை உண்டாக்குகிறது. எனவே சாப்பிட்ட பின் நடக்க வேண்டியது அவசியம். நடக்கும்போது செரிமான அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது

நடைபயிற்சி உடலில் எண்டோர்பின் என்ற ஹார்மோன்களை வெளியிடுகிறது மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்

சாப்பிட்ட பிறகு மிதமான நடைப்பயிற்சி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால் இந்த பழக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சாப்பிட்ட பிறகு நடப்பது உடல் அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இது தூக்கத்தை மேம்படுத்துகிறது.

இளைஞர்களிடையே மாரடைப்பால் ஏற்படும் இறப்புகள் அதிகரித்து வருகின்றன. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உடலில் சீரான இரத்த ஓட்டம் அவசியம். சாப்பிட்ட பிறகு நடப்பது கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதைத் தடுத்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.

குறிப்பாக இரவு நேர உணவு சாப்பிட்டவுடன் தூஙக செல்வதை தவிர்ர்க்க வேண்டும்.