பனிவரகில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது, அது கொழுப்பு அளவை குறைக்க உதவுகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி, நல்ல கொழுப்பு அதிகரிக்க உதவுகிறது.
இது டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. இதில் உள்ள மெக்னீசியச்சத்து அதற்கு உதவுகிறது. உடலில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்க மெக்னீசியச்சத்து மிகவும் முக்கியமானது.
பெண்களுக்கு மார்பக புற்றுநோய் எற்படுவதை தடுக்கிறது. பனிவரகு எடுத்துவரும் பெண்களுக்கு மார்பகப்புற்றுநோய் வரும் வாய்ப்பை 50 சதவீதம் குறைக்கிறது. பெண்களுக்கு மார்பக புற்றுநோய் என்பது பொதுவாக ஏற்படும் ஒன்றாகும்.
கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை அகற்ற உதவுகிறது. இதில் உள்ள குர்குமின், குயிர்சிடின், எலாஜிக் அமிலம் மற்றும் கேட்சின்ஸ் ஆகியவை ஊட்டச்சத்துக்களை உடலுக்கு வழங்குகிறது. அது அந்த உறுப்புகள் சிறப்பாக கழிவு நீக்கம் செய்ய உதவுகிறது.
பனிவரகு, ஆஸ்துமாவை தடுக்கிறது. இதை அடிக்கடி எடுத்துக்கொண்டால், ஆஸ்துமா மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவற்றை தடுக்கிறது.
பனிவரகில், கால்சியச்சத்து நிறைந்துள்ளது. இது எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தைகளுக்கு தேவையான கால்சியச்சத்தை வழங்குகிறது.
சிறுதானியங்களில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது. செல் பாதிப்பு, சோர்வு ஆகியவற்றை தடுக்கிறது. சுருக்கம், நிறமிழப்பு ஆகியவற்றை தடுக்கிறது. இதை தினமும் உட்கொள்வது வயோதிகத்தை தாமதமாக்குகிறது.
பனிவரகில் மெக்னீசியச்சத்து உள்ளது. இது ரத்த அழுத்ததை குறைக்க உதவுகிறது. பக்கவாதம் வரும் ஆபத்தை குறைக்கிறது. தமனி தடிப்பதையும் குறைக்கிறது.