மேஷம் முதல் மகரம் வரை! அரசன் ஆக ஆட்சி ஆள வைக்கும் அம்ச அவதார யோகம் யாருக்கு? இதோ முழு விவரம்!
By Kathiravan V Aug 01, 2024
Hindustan Times Tamil
ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லு சேர்க்கை என்று பொருள்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம் உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன. ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், பாக்கிய யோகம், ஜோதி யோகம் உள்ளிட்ட பல்வேறு யோகங்கள் உள்ளன. சூரிய பகவான் மூலம் கிடைக்கும் யோகங்களில் முதன்மையான யோகங்களில் ஒன்றாக அம்ச அவதார யோகம் விளங்குகின்றது.
அம்ச அவதார யோகத்தை பெற ஒருவர் சர லக்னங்கள் என்று சொல்லப்பட கூடிய மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய ஏதேனும் ஒரு லக்னங்களில் பிறந்திருக்க வேண்டும். இரண்டாவதாக சனி பகவான் உச்சம் பெற்று இருக்க வேண்டும் என்பது இதன் விதி ஆகும்.
மூன்றாவதாக குரு பகவானும், சுக்கிர பகவானும் தங்களுக்குள் கேந்திரங்களிலோ, அல்லது லக்ன கேந்திரங்களிலோ அமர வேண்டும்.
அம்ச அவதார யோகத்தை பெற ஒருவர் சர லக்னங்கள் என்று சொல்லப்பட கூடிய மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய ஏதேனும் ஒரு லக்னங்களில் பிறந்திருக்க வேண்டும். இரண்டாவதாக சனி பகவான் உச்சம் பெற்று இருக்க வேண்டும் என்பது இதன் விதி ஆகும்.
உதாரணமாக, ஒரு மேஷ லக்னத்தை எடுத்துக் கொள்வோம். இதில் சனி உச்சம் பெற்று உள்ளது. சர லக்னத்தில் பிறக்க ஒரு அமைப்பு இருக்கும். சனி பகவான் இரண்டை ஆண்டுகளுக்கு மேலாக துலாமில் உச்சம் பெற்று இருபார். குருவும், சுக்கிரனும் கேந்திரத்தில் அமர வேண்டும். இப்படி இருந்தால் இந்த அம்ச அவதார யோகம் உண்டாகும். இந்த விதிகள் கடகம், துலாம், மகரம் ஆகிய லக்னங்களுக்கும் பொருந்தும்.
கடக லக்னத்திற்கு சனி உச்சம் பெற்று, லக்னத்திற்கு 2ஆம் இடத்தில் சுக்கிரன், அவருக்கு 4, 7, 10 இல் குரு இருந்தாலும் இந்த அம்ச அவதார யோகம் வேலை செய்யும்.
அம்ச அவதார யோகம் கொண்டவர்களுக்கு பிறப்பே அற்புதமாக அமையும். பிறந்தது முதலே வளர்ச்சி, முன்னேற்றத்தை ஏற்படுத்தும். அரச போக வாழ்கையை தரும். குடும்பத்தில் செல்வ செழிப்பு, பொருளாதர வசதிகள், அதிகாரம் மிக்க பதவிகளை அடைவது, அதிகாரம் மிக்கவர்கள் உடன் தொடர்பு, அரசனுக்கு நிகரான வாழ்கையை பெறுவது உள்ளிட்ட நற்பலன்களை இது ஏற்படுத்தும்.