பிளாக் கரண்ட் டீ பருகுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Aug 31, 2024
Hindustan Times Tamil
பிளாக் கரண்ட் தமிழில் கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி என்று அழைக்கப்படுகிறது. இதில் பல்வேறு ஊட்டச்சத்து நன்மைகள் இருக்கின்றன
பிளாக் கரண்ட் பழத்தில் டீ தயார் செய்து பருகுவதால் ரிலாக்ஸ், புத்துணர்வு அனுபவத்தை தருகின்றன
பிளாக் கரண்ட் டீ நோய் எதிர்ப்பு சக்தி, நோய் தடுப்பு உள்பட பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது
பிளாக் கரண்ட் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி மற்றும் ஏ உள்ளன். அத்துடன் இதில் இருக்கும் இரும்பு சத்து நோய் தொற்று ஏற்படுவதை தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
பிளாக் கரண்ட் டீயில் இருக்கும் குறைவான அசிடிக் தன்மை வாய் மற்றும் தொண்டையில் ஏற்படும் வறட்சி, எரிச்சலை குறைக்கிறது
ஆக்ஸிஜனேற்ற அழுதத்தை குறைப்பதுடன், கல்லீரல், மூளை உள்பட இதர உடல் உறுப்புகள் சேதமடைவதை தடுக்கிறது. இதனால் நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் குறைகிறது
கிளௌகோமா நோயாளிகளுக்கு உள்விழி அழுத்தம், நோயுடன் தொடர்புடைய சில அறிகுறிகளைத் தணிக்கிறது பிளாக் கரண்ட் டீ
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை உண்டாக்கும். இது சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தக்ககூடும்.