பாலா அடித்தார் என்று கூறியது சர்ச்சையான நிலையில் அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் நடிகை மமிதா!
By Kalyani Pandiyan S Mar 01, 2024
Hindustan Times Tamil
நான் ஒன்றை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் நடித்த வணங்கான் திரைப்படம் தொடர்பாக ஆன்லைனில் பரவும் செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை.
நான் கொடுத்த நேர்காணலின் ஒரு பகுதியை மட்டும் கட் செய்து பதிவிட்டு, தவறான தலைப்பில் அவை செய்திகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. நான் பாலா சாருடன் கிட்டதட்ட ஒரு வருடம் பணியாற்றி இருக்கிறேன். அதில் படத்திற்கு முந்தைய பணிகளும், பிந்தைய பணிகளும் அடங்கும்.
அவர் என்னிடம் கனிவாக நடந்து கொண்டு என்னை ஒரு நல்ல நடிகையாக மாற்ற முயன்றார்.
அந்தப்படத்தில் மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ நான் எந்த வித துன்பத்தையும் அனுபவிக்கவில்லை என்பதை இங்கு மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்.
நான் அந்தப்படத்தில் இருந்து வெளியே வந்ததற்கான காரணம் என்னுடைய தொழில்முறை சார்ந்த கமிட்மெண்ட்டுகள்தான்.
இது தொடர்பான செய்தியை வெளிடும் முன்னர் என்னை தொடர்பு பேசிய ஊடகங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னை புரிந்து கொண்டதற்கு நன்றி”
சாப்பாட்டுக்குப் பிறகு சாப்பிட வேண்டிய பழங்கள் பற்றி பார்ப்போம்