பிரபல நடிகையான அனுஜா ரெட்டி, தான் நடித்த கிளாமர் கதாபாத்திரங்கள் பற்றியும், அதனால் ஏற்ப்பட்ட சலிப்பின் காரணமாக, காமெடி கதாபாத்திரங்கள் சென்றது குறித்தும் ஆதன் சினிமா சேனலுக்கு பேசி இருக்கிறார். 

By Kalyani Pandiyan S
Jul 19, 2024

Hindustan Times
Tamil

கதாநாயகி டூ கிளாமர் நடிகை அந்த பேட்டியில் அவர் பேசும் போது, “உண்மையில் நான் திரைத்துறைக்கு பாடல்களில் நடிப்பதற்காகத்தான் வந்தேன். முதலில் நான் நடித்த திரைப்படம் ஒரு மலையாள படம். அந்த படத்தில் நடிக்கும் பொழுது, எனக்கு 14 வயது. அந்த படத்தில் நான் கதாநாயகியாக நடித்தேன். 

ஆனால், அந்த படம் கடைசி வரை ரிலீசே ஆகவில்லை. இதனையடுத்து, நான் எனக்கு இனி திரைப்படங்களே வேண்டாம் என்று முடிவு எடுத்தேன். இதற்கிடையே, கோடம்பாக்கத்தில் ஆந்திராவில் இருந்து பெண் ஒருவர் நடிக்க வந்தார். அவருக்கு துணையாக நானும் வந்தேன். ஆனால், என்னை பார்த்த தயாரிப்பு குழுவினர், என்னை புக் செய்து விட்டார்கள்.

இதை நான் என்னுடைய பெற்றோரிடம் சொல்லும் பொழுது அவர்களும் சம்மதித்த காரணத்தால், நான் நடித்தேன். ஆனால், அந்தப் படமும் ரிலீஸ் ஆகவில்லை. இதையடுத்து நான் சினிமாவே வேண்டாம் என்று மீண்டும் முடிவெடுத்தேன். அதன் பின்னர், நான் பாடல்களில் நடித்துக் கொண்டிருந்தேன். 

அப்போது பாபு என்ற மிகவும் பிரபலமான ஒரு நடன இயக்குனர் இருந்தார். அவர் தான் என்னை வற்புறுத்தி, திட்டி முதல் வசந்தம் மற்றும் பூக்களை பறிக்காதீர்கள் ஆகிய திரைப்படங்களில் நடிக்க வைத்தார். அந்த படங்கள் ஹிட்டானதை தொடர்ந்து, எனக்கு மீண்டும் படங்கள் வர ஆரம்பித்தன. 

அதன் பின்னர் எனக்கே சினிமாவில் ஆர்வம் வந்துவிட்டது. அதன் பின்னர் எவ்வளவு நாட்கள் தான் நாம் இப்படியே பாடல்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருக்க முடியும் என்று யோசித்து, காமெடி கதாபாத்திரங்களில் நடிக்கலாம் என்று முடிவு எடுத்தேன். அப்படியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கும் பொழுது, சேரன் பாண்டியன் மற்றும் சின்னத்தம்பி ஆகிய படங்களில், என்னுடைய கதாபாத்திரங்களை அப்படியே கிளாமர் பக்கம் மாற்றி விட்டார்கள். 

முன்பு பாடல்களில் கிளாமரான காட்சிகளில் நடிக்கும் பொழுது எனக்கு எந்தவித தயக்கமும் இருந்ததில்லை. காரணம், அதை நான் ஒரு தொழிலாக பார்த்தேன். எப்படி அலுவலகத்திற்கு சென்று மக்கள் வேலை செய்கிறார்களோ, அதே போல, இதுவும் எனக்கு ஒரு வேலை என்பதை என்னுடைய மனதில் நிலைநிறுத்திக் கொண்டேன். " என்று பேசினார். 

ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் பானங்கள்