தமிழ் சினிமாவின் தீவிர காதலன் நடிகர் விக்ரம் பிறந்தநாள் இன்று

By Karthikeyan S
Apr 17, 2023

Hindustan Times
Tamil

1990-ல் 'என் காதல் கண்மணி’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகர் விக்ரம்

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய திரைத்துறைகளில் பணியாற்றியவர்

எண்ணற்ற படங்களில் நடித்திருந்தாலும் பாலாவின் சேது விக்ரமுக்கு அசைக்க முடியாத நம்பிக்கையை பெற்றுத்தந்தது

அஜித்தின் அமராவதியிலும், பிரபுதேவாவின் காதலன் போன்ற படங்களிலும் பின்னணி டப்பிங் ஆர்டிஸ்ட்டாக பணியாற்றியவர்

‘காந்தி’ திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்ற வடிவத்தில் காந்தியாக நடித்த பென் கிங்ஸ்லிக்குக் குரல் கொடுத்தவரும் விக்ரம்தான்

‘தில்’, ‘தூள்’, ‘ஜெமினி’, ‘சாமி’ ஆகிய படங்கள் விக்ரமை ஒரு முன்னணி மாஸ் ஹீரோவாக்கின

2003-ல் மீண்டும் இயக்குநர் பாலாவுடன் இணைந்து பிதாமகன் படத்தில் நடித்து அசத்தியிருந்தார். இப்படத்துக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார்

2011-ல் வெளியான தெய்வத் திருமகள் விக்ரமின் அசாத்திய நடிப்புத் திறமையை மீண்டும் பறைசாற்றியது

தனது நடிப்பால் திரையில் அசாத்திய சாதனைகளை நிகழ்த்திய நடிகர் விக்ரம் பிறந்தநாள் இன்று (ஏப்.17).

சோர்வு, உடல் பருமன், மன அழுத்தம் உள்பட உடல் ரீதியான பல்வேறு வெளிப்பாடு கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதன் அறிகுறியாக இருக்கலாம்