’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்கள் ராசியின் அதிபதி யார் என்று தெரியுமா? இதோ முழு விவரம்!

By Kathiravan V
Dec 20, 2024

Hindustan Times
Tamil

ஜோதிடத்தில் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கு ராசி அதிபதிகள் உள்ளனர். எந்த ராசிக்கு யார் ராசி அதிபதி என்பதை தற்போது பார்க்கலாம்.  

நவக்கிரகங்களின் ராஜாவான சூரிய பகவான் சிம்மம் ராசிக்கு அதிபதி ஆவார், 

மனோகாரகன் என்று அழைக்கப்படும் சந்திர பகவான் கடகம் ராசிக்கு அதிபதி ஆவார். 

நவக்கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படும் செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிகம் ராசிகளுக்கு அதிபதி ஆவார். 

நவக்கிரகங்களின் மந்திரி என்று அழைக்கப்படும் புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளுக்கு அதிபதி ஆவார், 

தேவ குரு என்று அழைக்கப்படும் குரு பகவான் தனுசு மற்றும் மீனம் ராசிகளுக்கு அதிபதி ஆவார், 

அசுர குரு என்று அழைப்படும் சுக்கிர பகவான் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளுக்கு அதிபதி ஆவார். 

நவக்கிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான் மகரம் மற்றும் கும்பம் ராசிகளுக்கு அதிபதி ஆவார். 

நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு, கேது கிரகங்களுக்கு வீடுகள் எதுவும் கிடையாது.

உலர் திராட்சையின் நன்மைகள்