தங்கப் பதக்கம் வென்றவருக்கு எருமை மாடு பரிசு!

By Pandeeswari Gurusamy
Aug 14, 2024

Hindustan Times
Tamil

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், எங்கும் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

ஆனால் அவரது மாமனார் அவருக்கு எருமை மாட்டை பரிசாக அளித்து ஆச்சரியப்படுத்தினார். அதற்கு காரணம் உண்டா?

நதீமின் மாமனார் முஹம்மது நவாஸ் இந்த பரிசை அளித்து இது தனது பாரம்பரியம் என்றார்.

கிராமப்புறங்களில் அவ்வாறு செய்வது 'மிக உயர்ந்த மதிப்பு' மற்றும் 'மரியாதைக்குரியது' என்று கருதப்படுகிறது.

நதீம் மகத்தான வெற்றியைப் பெற்றிருந்தாலும், அவரது வீடு இன்னும் கிராமத்தில் உள்ளது என்று அவரது மாமனார் கூறினார்.

பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள கானேவால் கிராமத்தைச் சேர்ந்த நதீம், ஒலிம்பிக்கில் 92.97 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார்.

அவர் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதால், அவர் ஒரே இரவில் நட்சத்திரமானார்.

டொயோட்டா அவருக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள புதிய கரோலா கிராஸ் ஹைப்ரிட் எலக்ட்ரிக் எஸ்யூவியை பரிசாக வழங்கியுள்ளது.

’கட்டிலில் ஆட்டம் போட வைக்கும் பூசணி விதைகள்!’ அடேங்கப்பா! இவ்வளவு நன்மைகளா?