மழை நேரத்தில் உடல் ஆற்றலை இழக்காமல் இருக்க சாப்பிட வேண்டிய பழங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Nov 26, 2024

Hindustan Times
Tamil

மழை நேரத்தில் சுவையுடன், ஊட்டச்சத்துகள் மிக்க பழங்களை சாப்பிடுவதன் மூலம் உடல் ஆற்றல் அளவை அதிகரிக்கலாம்

மழை நேரத்தில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவும் நிலையில் இந்த காலகட்டத்தில் உயர்சக்தியை தரும் சில ப்ரஷான பழங்களை மட்டும் சாப்பிட வேண்டும்

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஆப்பிள் பழங்கள் நிலையான உடல் ஆற்றலுக்கான சிறந்த ஆதாரமாக இருப்பதுடன் செரிமான ஆரோக்கியத்துக்கும் ஆதரவு அளிக்கிறது

அதிகப்படியான வைட்டமின் சி சத்துக்களுடன் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி உடலை நீரேற்றமாக வைப்பதில் ஆரஞஅசு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் மழை, குளிர் காலத்தில் புத்துணர்ச்சி மிக்க பழமாக திகழ்கிறது

வைட்டமின் சி, டயட்ரி நார்ச்சத்து மிக்கதாக இருந்து வரும் கிவி பழங்கள் ஆற்றல் அளவை தக்க வைக்கவும், செரிமான ஆரோக்கியத்துக்கு ஆதரவு அளிக்கவும் செய்கிறது

ஊட்டச்சத்துகளின் அடர்த்தி மிகுந்த மாதுளை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து இருப்பதுடன் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தை பேனி காக்கிறது. மழை, குளிர் காலத்தில் சிறந்த உயிர் சக்தியாக விளங்குகிறது

வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கும் திராட்சை பழங்கள் ஆற்றல் மற்றும் மனநிலையை மேம்படுத்துகிறது. அத்துடன் இதய ஆரோக்கியத்துக்கும் நன்மை தருகிறது

கோவக்காயில் இருக்கும் மருத்துவ குணங்கள்