தன்னம்பிக்கையுடன் தெரிய 5 வழிகள்  தன்னம்பிக்கை ஒருவருக்கு முக்கியமான ஒன்று. அது உங்கள் சுயமரியாததையை மட்டும் உயர்த்தவில்லை. மற்றவர்கள் உங்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதையும் தீர்மானிக்கிறது. எனவே தன்னம்பிக்கையுடன் இருப்பது மிக அவசியமான ஒன்று. உங்கள் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் நீங்கள் தன்னம்பிக்கையுடன் மிளிர இதோ 5 வழிகள் 

By Priyadarshini R
Aug 19, 2023

Hindustan Times
Tamil

நேர்மறையான சுய பேச்சு 

unsplash

உங்கள் உள விமர்சனத்தை அமைதியாக்குங்கள். எதிர்மறை எண்ணங்களை பாரட்டுகளாக மாற்றுங்கள். நேர்மறை சிந்தனைகளை வளர்த்தெடுத்தால், அது உங்கள் நடவடிக்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும். 

unsplash

உடல் மொழி 

unsplash

பலமான கைகுலுக்கல், எதிரில் இருப்பவரின் கண்களை பார்த்து பேசுவது, திறந்த மனதுடனும், சிரித்த முகத்துடனும் பேசுவது என்ற உடல் மொழி மற்றவர்கள் மத்தியில் உங்களை தன்னம்பிக்கை நிறைந்தவராக காட்டும். 

unsplash

தயாரிப்பு  அறிவு தன்னம்பிக்கையை உருவாக்குகிறது. ஏதேனும் பொதுநிகழ்ச்சி அல்லது ஏதாவது சமர்ப்பிக்கிறீர்கள் என்றால், தயாரிப்பு மிக அவசியமான ஒன்றாகிறது. நன்றாக முன் தயாரிப்புடன் இருந்தீர்கள் என்றால், நீங்கள் எந்தவிதமான சூழலையும் எதிர்கொள்ள முடியும். 

unsplash

நன்றாக கவனித்தல்  எதிலும் நன்றாக கவனிக்க வேண்டும். ஒரு உரையாடலில் கலந்துகொண்டால் எதிராளிகள் கூறுவதை நன்றாக கவனித்து, அறிவார்ந்த பதில்களை கூற வேண்டும். மற்றவர்களுக்கு உதவுவதில் நேர்மையான ஆர்வத்துடன் ஈடுபடவேண்டும். அது உங்களை தன்னம்பிக்கை மிக்கவராக காட்டும். 

unsplash

நன்றாக உடை அணிந்துகொள்ளுங்கள் 

unsplash

உங்களை தன்னம்பிக்கையுடன் காட்டும் உடை மற்றும் மேக்கப்களை இட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்கள் என்பதில் நீங்கள் சௌகர்யமாக உணர்ந்தீர்கள் என்றால் உங்கள் தன்னம்பிக்கை மிளிரும்.