மழை நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பழங்கள் மற்றும் காய்கறிகள் எவை என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Oct 16, 2024

Hindustan Times
Tamil

நோய் மற்றும் தொற்று பாதிப்புகளில் இருந்து போராடும் உணவுகளாக வைட்டமின் சி நிறைந்த உணவுகள் இருக்கின்றன. இவை உடலின் ஆன்டிஆக்ஸிடன்ட் உற்பத்தியை அதிகிரித்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதன் மூலம் தொற்றுக்கு பாதிப்புக்கு எதிராக போராட உதவுகிறது

அந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வைட்டமின் சி எந்தெந்த பழங்கள், காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்பதை பார்க்கலாம்

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, கிரேப் பழங்கள், எலுமிச்சை, சாத்துக்குடி போன்றவற்றை சாப்பிடலாம். இதில் வைட்டமின் சி செழுமையாக உள்ளது

கொய்யா பழத்தில் அதிகப்படியான வைட்டமின் சி நிறைந்துள்ளன. இது செரிமானத்தை ஊக்குவிப்பதுடன், குறைவான கலோரி கொண்ட பழமாக இருப்பதால் எடை இழப்புக்கும் வழி வகுக்கிறது

வெப்பமண்டல பழமாக இருந்து வரும் பைனாப்பிள் வைட்டமின் சி மிக்க பழங்களில் ஒன்றாக உள்ளது. இயற்கையான இனிப்பு சுவை கொண்ட இந்த பழம் அழற்சிக்கு எதிரான பண்புகளை கொண்டுள்ளது

பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்ட பழமாக இருந்து வரும் பப்பாளியில் வைட்டமின் சி நிறைந்து இருப்பதோடு, சரும ஆரோக்கியத்தையும் பேனி பாதுகாக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழமாக உள்ளது

ஊட்டச்சத்து அடர்த்தி மிகுந்த காய்கறியாக புரோக்கோலி இருந்து வருகிறது. இதில் அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது

சிவப்பு கொடை மிளகாயில் அதிகப்படியான வைட்டமின் சி மற்றும் ஏ நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு, கண்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது

தக்காளி மற்றும் சிலுவை காய்கறிகளான முட்டை கோஸ், காலிபிளவர், கேலே போன்றவற்றிலும் வைட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது 

கற்றாழையை எந்த திசையில் நட்டால், லட்சுமி தேவி அருள் கிடைக்கும் தெரியுமா..

Pexels