வீட்டில் இருந்தபடியே தொண்ட வலிக்கு எளிய முறையில் தீர்வு காண்பது எப்படி என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Nov 09, 2024

Hindustan Times
Tamil

தொண்டை வலி அல்லது புண், தொண்டையில் கரகரப்பு எரிச்சலை ஏற்படுத்தும். இதற்காக மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாமல் வீட்டில் இருந்தபடியே தீர்வு காணலாம்

உப்பு கலந்த தண்ணீர் கொப்பளிப்பு, இஞ்சி டீ உள்பட வீட்டிலேயே தொண்டை வலிக்கு தீர்வு காண்பது எப்படி என்பதை பார்க்கலாம்

எலுமிச்சை மற்றும் தேன் கலந்த டீ பருகலாம். வைட்டமின் சி நிறைந்திருக்கும் எலுமிச்சை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், தேன் தொண்டைக்கு இதமளிக்கும். இவை இரண்டும் சேர்ந்த கலவை, வீக்கம் மற்றும் வலியை குறைக்கும்

வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, தொண்டை வரை போக வைத்து கொப்பளிக்க வேண்டும். இதை செய்வதன் மூலம் வீக்கம் குறைந்து, பாக்டீரியாக்கள் கொல்லப்படுவதுடன், சளி இலகுவாக்கி வெளியேற்றும்

அழற்சிக்கு எதிரான பண்புகளை கொண்டிருக்கும் இஞ்சி, வலியை போக்குவதோடு, தொண்டையில் ஏற்படும் எரிச்சலை குறைக்கிறது. அத்துடன் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துகிறது

சிக்கன், மட்டன் சூப்களை தயார் செய்து பருகலாம். இதனால் உடல் நீரேற்றம் அடைவதோடு, தொண்டையும் இதம் பெறும். அத்துடன் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் பெறலாம்

டைலூட் செய்யப்பட்ட ஆப்பிள் சீடர் வினிகர் தொண்டையில் இருக்கும் பாக்டீரியாக்களை கொல்வதோடு, பிஎச் அளவை சமநிலையுடன் வைக்கிறது. அத்துடன் மேற்கொண்டு தொற்று பாதிப்பு ஏற்படுவதையும் தடுக்கிறது

வால்நட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்