உலர் ஆப்ரிகாட் பழங்களை ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்வோம்

By Muthu Vinayagam Kosalairaman
Oct 09, 2024

Hindustan Times
Tamil

உலர் ஆப்ரிகாட்டில் டயட்ரி நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஏ மற்றும் ஈ நிறைந்துள்ளது

உலர் ஆப்ரிகாட்டில் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் பேனி பாதுகாக்கும் விதமாக பொட்டாசியம், இரும்பு போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளன

இதில் இருக்கும் வைட்டமின் ஏ இரவு நேரத்தில் கண்களின் பார்வைத்திறனுக்கு உதவுவதோடு கண்களுக்கு கவசமாக திகழ்கிறது. ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தில் இருந்து பாதுகாத்து ஒட்டு மொத்த கண்கள ஆரோக்கியத்துக்கும் நன்மை தருகிறது

குறைவான க்ளைசெமிக் குறியீடு கொண்டிருப்பதால் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்து, நீடித்த ஆற்றலை தருகிறது

ப்ளேவனாய்ட் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் க்ளோரோஜெனிக் அமிலம், கேட்சின்ஸ், குவார்செடின் போன்ற சேர்மானங்கள் ஆக்சிஜனேற்ற அழுதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை சமநிலை ஆக்கி, இதய நோய் பாதிப்பு ஆபத்தை குறைக்கிறது

இதில் இருக்கும் பீட்டா கரோடீன் வைட்டமின் ஏ ஆக மாறி  சுருக்கங்கள், கோடுகளை போக்கி சரும ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கிறது

இதில் இருக்கும் நார்ச்சத்து வயிறு நிரம்பிய உணர்வை தருவதுடன் உடல் எடையை நிர்வகிக்க உதவுகிறது

ஸ்நாக்ஸ் சாப்பிட்டாலும் தொப்பை போட கூடாதா.. இத சாப்பிடுங்க!