உங்கள் உணவு டயட்டில் பச்சை பீன்ஸ் சேர்ப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Dec 04, 2024

Hindustan Times
Tamil

உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் விளையும் பீன்ஸ் மஞ்சள், பர்பிள் உள்பட பல நிறங்களிலும் வளர்கிறது

இதய ஆரோக்கியம், கர்ப்பினி பெண்களுக்கு நன்மை என பீன்ஸ்களில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்

அதிகப்படியான கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்திருக்கும் பீன்ஸ் எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கிறது

செரிமான ஆரோக்கியத்தை சீராக வைப்பதுடன், குடல் இயக்கம் சீராக செயல்பட உதவுகிறது

இதில் போலேட், பி வைட்டமின்கள் நிறைந்திருக்கிறது. இது சிசுக்களின் வளர்ச்சிக்கு அடிப்படையான சத்துக்களாக உள்ளன. பிறப்பு குறைபாடுகள் ஆபத்தை குறைக்கிறது

வைட்டமின் கே, கால்சியம் நிறைந்திருக்கும் பீன்ஸ் எலும்புகளை வலுவடைய செய்கிறது. இதன் எலும்பு முறிவு ஆபத்து தடுக்கப்படுகிறது

பீன்ஸில் நிறைந்திருக்கும் பி வைட்டமின்கள் ஹோமோசைஸ்டீன் அளவை குறைக்கிறது. இதன் மூலம் செரோடோனின், டோபமைன்,  நோர்பைன்ப்ரைன் உற்பத்தி அதிகரித்து மனநிலை மாற்றத்தை ஏற்படுத்தி நல்ல ஆழ்ந்த தூக்கத்தை பெற உதவுகிறது

நாவல் பழத்தின் நன்மைகள்