பனிக்காலத்தில் பேரிட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Dec 18, 2024
Hindustan Times Tamil
அடிப்படை ஊட்டச்சத்துகள், தாதுக்களும் நிறைந்த பழமாக பேரிட்சை இருந்து வருகிறது. இதன் காரணமாகவ வீட்டில் உள்ள பெரியவர்கள் பேரிட்சை சாப்பிடுமாறு அறிவுறுத்துவார்கள்
பனிக்காலத்தில் பேரிட்சை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு சிறந்த பவர் ஹவுஸாக மாறி அவை செயல்படுகின்றன
பேரிட்சையில் இருக்கும் வைட்டமின்கள் சரும ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கையான பொலிவு தருவதோடு, சருமத்தை நீரேற்றமாக வைக்க உதவுகிறது
பேரிட்சையில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து சீரான செரிமானத்துக்கு நன்கு உதவுகிறது. பனிக்காலத்தில் போதிய உடல் சார்ந்த இயக்கங்கள் இல்லாமல் போவதால் செரிமான பிரச்னை ஏற்படும். இதை சரி செய்ய பேரிட்சை உதவுகிறது
பேரிட்சையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தொற்றுகளுக்கு எதிராக போராடுகிறது. நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துகிறது. இதனால பனிக்காலம் முழுவதும் ஆரோக்கியமாகவும், ஆற்றலுடனும் இருக்க உதவுகிறது
பேரிட்சையில் இருக்கும் அதிகப்படியான பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்கி, இதய ஆரோக்கியத்துக்கு ஆதரவு தருகிறது
கால்சியம், வைட்டமின் டி ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாக திகழும் பேரிட்சை எலும்புகள் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பனிக்காலத்தில் சூரிய ஒளியை உள்வாங்குவது குறைவாக இருக்கும் நிலையில் எலும்புகள் ஆரோக்கியத்தை தக்க வைக்கிறது