தினமும் வெள்ளம் கலந்த பால் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Oct 05, 2024

Hindustan Times
Tamil

பதப்படுத்தப்படாத கரும்பு சர்க்கரைதான் வெள்ளமாக மாறுகிறது. இதை பாலுடன் கலந்து பருகும்போது ஊட்டச்சத்து பானமாக மாறுகிறது

வெள்ளம் கலந்து பால் பருகுவதால் கிடைக்கும் 5 முக்கிய நன்மைகள் இவை தான்

வெள்ளத்தில் இரும்பு சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அதேபோல் பாலில் கால்சியம், புரதம், வைட்டமின் டி உள்ளது. எனவே இவை இரண்டு ஒன்று சேரும்போது சமநிலையுடன் கூடிய ஊட்டச்சத்து பானமாக மாறுகிறது

வெள்ளத்தில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு அமைப்பை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ச்சியாக இந்த பானம் பருகுவதால் நோய் எதிர்க்கும் தன்மை அதிகரிக்கும்

வெள்ளத்தில் இடம்பிடித்திருக்கும் இரும்புச்சத்து ரத்தத்தின் ஆரோக்கியத்துக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. வெள்ளம் கலந்த பால் குடிப்பதால் ரத்த ஓட்டம் மேம்பட்டு, ரத்த சோகை ஏற்படுவது தடுக்கப்படுகிறது

நச்சு நீக்கும் தன்மை கொண்டிருக்கும் வெள்ளம், உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது

பாலில் இருக்கும் கால்சியம், வைட்டமின் டி எலும்புகளை வலுப்படுத்துகிறது. தொடர்ச்சியாக வெள்ளம் கலந்த பால் சாப்பிடுவதால் கீழ்வாதம் பாதிப்பு தடுக்கப்படுகிறது

தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரை ஏன் குடிக்க வேண்டும் பாருங்க!