தினமும் பேரிட்சை சாப்பிடுவதல் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Oct 11, 2024
Hindustan Times Tamil
பேரிட்சை இயல்பாகவே இனிப்பாக இருப்பதோடு, ஊட்டச்சத்து மிகுந்த பழ வகையாகவும் உள்ளது
அதிகப்படியான வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து கொண்டதாக இருக்கும் பேரிட்சை ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு நன்மை தருகிறது
இயற்கையான சர்க்கரை கொண்டிருப்பதால் ஆற்றலை அதிகரிக்கிறது. பதப்படுத்தப்பட்ட சர்க்கரைக்கு சிறந்த மாற்றாக பேரிட்சை இருக்கிறது
பேரிட்சையில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுதத்தை கட்டுப்படுத்துகிறது. இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதயம் தொடர்பான நோய் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கிறது
நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின்களான பி1,பி2, பி3 பேரிட்சையில் நிறைந்துள்ளது. பலவேறு உடல் செய்லபாட்டுக்கு இவை உதவுவதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் நன்மை தருகிறது
பேரிட்சையில் இருக்கும் மெக்னீசியம் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு நன்மை தருகிறது. தினமும் பேரிட்சை சாப்பிடுவதால் கீழ்வாதம் பாதிப்பு தடுக்கப்படுவதுடன், உங்கள் எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது
பேரிட்சை வயிறு நிரம்பிய உணர்வை நீண்ட நேரம் தருவதன் மூலம் தேவையில்லாமல் சாப்பிடுவதை குறைக்கிறது. இதன் மூலம் உடல் எடையை நிர்வகிக்கிறது
கற்றாழையை எந்த திசையில் நட்டால், லட்சுமி தேவி அருள் கிடைக்கும் தெரியுமா..