உடலில் இரும்பு சத்து குறைப்பாட்டை போக்கும் உணவுகள் எவையெல்லாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Nov 08, 2024
Hindustan Times Tamil
உடல் முழுவதும் இரத்த சிவப்பணுக்களில் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்கு இரும்பு அவசியமானதாக உள்ளது
இரும்பு சத்து குறைபாடு ஏற்பட்டால் சோர்வு, ரத்த சோகை போன்ற உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். அந்த வகையில் இரும்பு சத்து குறைப்பாட்டை போக்கும் உணவுகள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
மட்டி மீன் சுவை மிகுந்ததாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இரும்பு சத்து மிகுந்து காணப்படுகிறது. அதேபோல் சிப்பிகளிலும் அதிக இரும்பு சத்து உள்ளது
வைட்டமின் சி, ஹீம் அல்லாத இரும்பு சத்து நிறைந்திருக்கும் பசலை கீரைகள் உடலில் இரும்பு சத்து உறிஞ்சுவதை மேம்படுத்துகிறது
இறைச்சிகளில் கல்லீரல், கிட்னி, மூளை, இதயம் போன்ற உறுப்புகளின் இறைச்சி போதிய அளவில் இரும்பு சத்துக்களை கொண்டிருப்பதாகவும், அதிகப்படியான ஊட்டச்சத்துகளுடன் இருக்கும்
ரத்த சோகை இருப்பவர்கள் அதிகமாக சிவப்பு இறைச்சிகள் சாப்பிடலாம். இரும்பு சத்துக்களின் ஆதாரமாக இவை திகழ்கின்றன
பூசணி விதைகளில் அதிகப்படியான இரும்பு சத்துக்களுடன், வைட்டமின் கே, துத்தநாகம், மாங்கனீசு போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன