யோகாவை ஏன் உங்களது தினசரி வாழ்க்கையில் கொண்டு வர வேண்டும்?
By Kalyani Pandiyan S Mar 19, 2024
Hindustan Times Tamil
யோகா உங்களது மன அழுத்ததை குறைக்கும். அதுமட்டுமில்லாமல் மனதளவில் ஒரு வித தெளிவை கொடுக்கும்.
உடலுக்கு நெகிழ்வுதன்மையை கொடுக்கும். இது உங்களது உடற்பயிற்சியின் போது ஏற்படும் காயங்களையும், அன்றாட வேலைகளின் போது ஏற்படும் காயங்களையும் தவிர்க்க உதவும்.
யோகா உங்களது முழு உடலில் உள்ள தசைகளை வலுப்படுத்துகிறது.
யோகா ஒருங்கிணைதல், நிலைத்தன்மை, சமநிலை உள்ளிட்டவற்றில் வேலை செய்கிறது. இதனால் அதிக கவனம் தேவைப்படும் செயல்களில் நம்மை இடையூறு இல்லாமல் ஈடுபட வைக்கிறது.
உங்கள் உடலின் முதுகுத்தண்டில் சீரான அமைப்பை கொண்டு வர யோகா உதவுகிறது. உடலுக்கு சரியான சீரமைப்பையும் கொடுக்கிறது. இது கழுத்து, தோள்கள் மற்றும் முதுகு ஆகியவற்றில் உள்ள அசெளகரியத்தை போக்க உதவுகிறது. மேலும், அவை சீரான நிலையில் இல்லாமல் இருக்கும் போது வரும் வலியையும் போக்குகிறது.
தியானம் செய்வது நமது மனதிற்கு தெளிவு, கூர்மையான கவனம், ஒருமுகப்படுத்தும் தன்மை உள்ளிட்டவற்றை கொடுக்கிறது. இது அன்றைய தினத்தின் தினசரி வேலைகள் மற்றும் செயல்களை திறம்பட செய்ய வழிவகுக்கிறது.