செகண்ட் ஹேண்ட் கார் வாங்கும்போது கவனிக்க
வேண்டியவை
By Marimuthu M Aug 12, 2024
Hindustan Times Tamil
சிங்கிள் ஓனர் கார்களை வாங்குவது நல்லது.
டீசல் போடும்படியான கார்களை வாங்குவது நல்லது. ஏனெனில் அதை விற்கும்போது நல்ல விலைக்குப் போகின்றன
கார்களின் வெளித்தோற்றத்தைப் பார்க்காமல் அதில் மைலேஜ், என்ஜின் கண்டிசன் ஆகியவற்றை வைத்து வாங்குங்கள்
கார்களை இயக்கும்போது ஏதாவது லீக் ஆகிறதா என செக் செய்யுங்கள்
கார்களின் ஹெட் லைட், சீட், மேற்கூரை, சீட்கள் ஆகியவற்றின் இயங்கும் விதத்தை வைத்து வாங்குங்கள்
எந்த காரையும் குறைந்த பட்சம் குண்டும் குழியுமான சாலை, நெடுஞ்சாலை அனைத்திலும் குறைந்த பட்சம் 15 நிமிடங்கள் ஓட்டி, ஸ்டியரிங் கண்ட்ரோல் வருகிறதா என்பதைப் பார்த்து வாங்குங்கள்.
பழைய கார்களை வாங்கும்போது டீசல் கார் என்றால் 15 ஆயிரம் கிலோ மீட்டர் வரை ஓடியிருக்கலாம். பெட்ரோல் கார் என்றால் 12 ஆயிரம் கி.மீ.வரை ஓடியிருக்கலாம்.
செகண்ட் காரை வாங்கும்போது, இந்த நொடிக்கு முன்னால் வரை, இந்த கார் குறித்த அனைத்து விஷயங்களுக்கும்,அதன் பழைய உரிமையாளர் தான் பொறுப்பு என்பதை எழுதி இருவரும் கையெழுத்திட வேண்டும். ஆர்.சி. புக்கை சரிபார்த்து வாங்க வேண்டும்.