ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றத்தால் ராஜயோகத்தை பெறுகின்ற ராசிகள்
Canva
By Suriyakumar Jayabalan Apr 16, 2025
Hindustan Times Tamil
நவகிரகங்களின் நிழல் கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் அப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். இந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் கிரகங்களின் மாற்றத்தால் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
Canva
அந்த வகையில் கடந்த மார்ச் 16ஆம் தேதி அன்று ராகு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். பொதுவாக ராகு பகவானின் இடமாற்றம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என கூறுவார்கள்.
Canva
ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் சில ராசிகளுக்கு நேர்மறையான மாற்றங்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ராகு பகவானின் பூரட்டாதி நட்சத்திர பயணத்தால் ஒரு சில ராசிகள் ராஜ பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Canva
மகர ராசி: ராகு நட்சத்திர பெயர்ச்சி உங்களுக்கு பல்வேறு விதமான யோகங்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அடுத்த 18 மாதங்கள் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போவதாக கூறப்படுகிறது. வருமானம் உங்களுக்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
Canva
கும்ப ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் ராகு பகவான் நகர்ந்து செல்கின்றார். அதனால் உங்களுக்கு வாழ்க்கையில் சாதகமான பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும் எனக் கூறப்படுகிறது.
Canva
மீன ராசி: ராகு பகவானின் பூரட்டாதி நட்சத்திர பயணம் உங்களுக்கு சிறப்பான மாற்றங்களை ஏற்படுத்திக் கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
Canva
பொறுப்பு துறப்பு: இவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மைக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. துறை வல்லுனர்களைக் கலந்தாலோசிப்பது முக்கியம்.
Canva
கர்ப்பிணிகள் பீன்ஸ் சாப்பிடலாமா? பயன்கள் யாவை என இங்கு தெரிந்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு மிகவும் உதவியானதாக இருக்கும்.