அனுமன் ஜெயந்தி பஞ்சகிரக யோகத்தை அனுபவிக்க போகும் ராசிகள் 

Canva

By Suriyakumar Jayabalan
Apr 12, 2025

Hindustan Times
Tamil

ஜோதிட சாஸ்திரத்தின்படி கிரகங்கள் அவ்வப்போது தங்களுக்கு ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இந்த காலகட்டத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக ஒரு பண்டிகை ஒரு ஆண்டில் ஒருமுறை கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் அனுமன் ஜெயந்தி மட்டும் வருடத்திற்கு இரண்டு முறை கொண்டாடப்படுகிறது. 

Canva

வட இந்தியாவில் பங்குனி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி திருநாளில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. நமது தமிழ்நாட்டில் மார்கழி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை திருநாளில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. 

Canva

பங்குனி பௌர்ணமி திருநாளான இன்று வட இந்தியாவில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. அனுமன் ஜெயந்தி திருநாளான இன்று ஜோதிட சாஸ்திரத்தின் படி பஞ்சகிரக யோகம் உருவாகியுள்ளது. 57 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் சூரியன், புதன், சுக்கிரன், சனி, ராகு என ஐந்து கிரகங்கள் சேர்ந்து பயணம் செய்கின்றனர். 

Canva

மீன ராசியில் ஐந்து கிரகங்கள் சேர்ந்து பயணிக்கின்ற காரணத்தினால் பஞ்சகிரக யோகம் உருவாகியுள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜ யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

Canva

ரிஷப ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் பஞ்சகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Canva

மிதுன ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் பஞ்சகிரக யோகம் உருவாக்கி உள்ளது அனுமன் ஜெயந்தி திருநாளில் இருந்து உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும் என கூறப்படுகிறது. நல்ல முன்னேற்றத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

Canva

மிதுன ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் பஞ்சகிரக யோகம் உருவாக்கி உள்ளது அனுமன் ஜெயந்தி திருநாளில் இருந்து உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும் என கூறப்படுகிறது. நல்ல முன்னேற்றத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

Canva

பொறுப்பு துறப்பு : இந்த தகவல்கள் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை அடிப்படையாகக் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் அதன் நிபுணர்களை அணுகவும்.

Canva

கோடை வெயிலுக்கு இதமாக குளிர்ச்சியான பானங்கள், நீர் பருக வேண்டும் என மனம் ஏங்குவது இயல்பானது தான். இயற்கையான முறையில் குளிர்ச்சியான நீர் குடிப்பதற்கான சிறந்த வழியாக மண்பானை நீர் உள்ளது