ராகு பகவானின் கும்ப ராசி பயணத்தால் யோகத்தை பெற்ற ராசிகள்
Canva
By Suriyakumar Jayabalan Apr 18, 2025
Hindustan Times Tamil
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்களில் நிழல் கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு பகவானுக்கு சொந்தராசி என்று கிடையாது. ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வதற்கு 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார்.
Canva
ராகு பகவான் தற்போது குருபகவானின் சொந்தமான ராசியான மீன ராசிகள் பயணம் செய்து வருகின்றார். இந்த 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் ராகு பகவான் சனி பகவானின் கும்ப ராசிக்கு செல்கின்றார்.
Canva
ராகு பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இதில் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Canva
மேஷ ராசி: இந்த 2025 ஆம் ஆண்டு ராகு பெயர்ச்சி உங்கள் ராசியில் 11 வது வீட்டில் நிகழ்கின்றது. இதனால் நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
Canva
கன்னி ராசி: இந்த 2025 ஆம் ஆண்டு ராகு பெயர்ச்சி உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் நிகழவுள்ளது. இதனால் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் முடிவுக்கு வரும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
Canva
தனுசு ராசி: இந்த 2025 ஆம் ஆண்டு ராகு பெயர்ச்சி உங்கள் ராசியில் மூன்றாவது மெட்டல் நிகழவு உள்ளது. இதனால் உங்களுக்கு வெற்றி கதவுகள் திறக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. எந்த வேலை செய்தாலும் அதில் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது.
Canva
பொறுப்பு துறப்பு: இவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மைக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. துறை வல்லுனர்களைக் கலந்தாலோசிப்பது முக்கியம்.
Canva
குரு மிதுன ராசியில் நுழைந்து கொடுமையான பலன்களை கொடுக்கும் ராசிகள்