புதன் பகவானின் உதயத்தால் யோகத்தை பெற்ற ராசிகள் 

Canva

By Suriyakumar Jayabalan
Apr 16, 2025

Hindustan Times
Tamil

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். இந்த காலகட்டத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிதன் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

Canva

புதன் பகவான், பேச்சு, படிப்பு, புத்திசாலித்தனம், வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சந்திர பகவானுக்கு பிறகு மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். புதன் பகவான் இருப்பினும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுகக கூடியவர். 

Canva

புதன் பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். கடந்த மார்ச் 17ஆம் தேதி அன்று புதன் பகவான் அஸ்தமனம் ஆனார். மார்ச் 31ஆம் தேதி அன்று மீன ராசியில் புதன் பகவான் உதயமானார். புதன் பகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு நற்பலன்கள் கிடைக்க உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

Canva

விருச்சிக ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் உதயமாக உள்ளார். இதனால் உங்களுக்கு குழந்தைகளால் நல்ல செய்தி தேடி வரும் என கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

Canva

கும்ப ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் உதயமாக உள்ளார். இதனால் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்ட காலமாக இது அமையும் என கூறப்படுகிறது. திடீர் நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வேலை செய்யப்படத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது

Canva

மிதுன ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் பகவான் உதயமாக உள்ளார். எதனால் வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

Canva

பொறுப்பு துறப்பு: இவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மைக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. துறை வல்லுனர்களைக் கலந்தாலோசிப்பது முக்கியம்.

Canva

உலர் திராட்சை ஊற வைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் அற்புதமான பலன்களை பாருங்க!

Canva