குரு பகவானின் மிதுன ராசி பயணத்தால் ராஜயோகத்தை பெற்ற ராசிகள்
Canva
By Suriyakumar Jayabalan Apr 18, 2025
Hindustan Times Tamil
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்கள் தேவர்களின் குருவாக திகழ்ந்து வருபவர்.
Canva
குரு பகவான் குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். குரு பகவான் தற்போது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியான ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
Canva
இந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் குரு பகவான் தனது ராசியை மாற்ற உள்ளார். புதன் பகவானின் சொந்தமான ராசியான மிதுன ராசிக்கு குரு பகவான் செல்கின்றார். இது மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. குருபகவானின் மிதுன ராசி பயணம் ஒரு சில ராசிகள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது.
Canva
மிதுன ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் குருபகவான் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது.
Canva
துலாம் ராசி: உங்கள் ராசியின் ஒன்பதாவது வீட்டில் குருபகவான் நுழைகின்றார். இதனால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரமான எதிர்பார்க்கப்படுகிறது.
Canva
ரிஷப ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டிற்கு குரு பகவான் பயணம் செய்ய வருகின்றார். இதனால் உங்களுக்கு பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும் என கூறப்படுகிறது. வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. தொழிலை இரவு படுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலைகளில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என கூறப்படுகிறது.
Canva
பொறுப்பு துறப்பு: இவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மைக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. துறை வல்லுனர்களைக் கலந்தாலோசிப்பது முக்கியம்.
Canva
கவனம் மக்களே.. சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிப்பதால் எந்த 3 ராசிகளுக்கு பாதகம்!