குரு சூரியன் சேர்க்கை குரு ஆதித்ய யோகத்தின் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகள்
Canva
By Suriyakumar Jayabalan May 06, 2025
Hindustan Times Tamil
நவக்கிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார் குரு பகவான்.
Canva
தேவர்களின் குருவாக விளங்கக்கூடிய குருபகவான் வருகின்ற ஜூன் மாதம் சக்தி வாய்ந்த குரு ஆதித்ய ராஜயோகத்தை உருவாக்க உள்ளார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த யோகம் உருவாக உள்ளது. வருகின்ற ஜூன் மாதம் சூரியன் மற்றும் குரு இவர்கள் இருவரும் மிதுன ராசியில் இணைகின்ற காரணத்தினால் இந்த ராஜயோகம் உருவாகின்றது.
Canva
சூரியன் குரு சேர்க்கை மூலம் உருவாகும் குரு ஆதித்ய யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Canva
கன்னி ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குரு சூரியன் சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு குரு ஆதித்ய யோகம் அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஆடம்பர வசதிகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
Canva
சிம்ம ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சூரியன் குரு சேர்க்கை குரு ஆதித்ய யோகம் உருவாக உள்ளது. இதனால் உங்களுக்கு வருமானத்தில் உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது.
Canva
மீன ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் குரு சூரியன் சேர்க்கை குரு ஆதித்ய யோகம் உருவாக உள்ளது. இதனால் உங்கள் வாழ்க்கையில் ஆடம்பரம் மற்றும் வசதிகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பணம் யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
Canva
பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.
Canva
சனி பகவான் ஒரு நீதிமான், துலாம் ராசியில் அவர் உச்சம் அடைவார். கும்பம், மகரம் ராசிகளில் அவர் ஆட்சி ஆவார். மேஷ ராசியில் அவர் நீச்சம் அடைவார்.