சுக்கிரனின் பூரட்டாதி நட்சத்திர பயணத்தால் திருமண யோகத்தை பெற்ற ராசிகள்
Canva
By Suriyakumar Jayabalan Apr 16, 2025
Hindustan Times Tamil
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுவார்கள். அந்த காலகட்டத்தில் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது.
Canva
அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடிய சுக்கிரன் செய்யக்கூடிய ராசி மாற்றம் மட்டுமல்லாது நட்சத்திர இடமாற்றமும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
Canva
சுக்கிரன் ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது குரு பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும். குரு பகவானின் நட்சத்திரத்தில் சுக்கிரன் நுழைகின்ற காரணத்தினால் அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது.
Canva
சுக்கிரனின் பூரட்டாதி நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Canva
ரிஷப ராசி: சுக்கிரன் பூரட்டாதி நட்சத்திர பயணம் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் என கூறப்படுகிறது.
Canva
கன்னி ராசி: சுக்கிரன் பூரட்டாதி நட்சத்திர பயணம் உங்களுக்கு பெரிய பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Canva
மகர ராசி: சுக்கிரன் பூரட்டாதி நட்சத்திர பயணம் உங்களுக்கு நல்ல நிதி ஆதாயங்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாழ்க்கையில் உங்களுக்கு பல்வேறு விதமான முன்னேற்றம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொறுப்பு துறப்பு: இவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மைக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. துறை வல்லுனர்களைக் கலந்தாலோசிப்பது முக்கியம்.
Canva
ஆரோக்கியமான செரிமானத்திற்கு இந்த 9 காலை பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.