அஜித்துடன் பணியாற்றியது குறித்து பிரியா வாரியர் நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டு இருக்கிறார். 

By Kalyani Pandiyan S
Apr 10, 2025

Hindustan Times
Tamil

எங்கிருந்து தொடங்குவது... இதை நான் நெடுநாளாக மறைத்து வைத்திருந்தேன். நான் இங்கு எழுதும் வார்த்தைகள் எதுவும் உங்கள் மீதான என்னுடைய அபிமானத்தை சொல்ல போதுமானதாக இருக்காது. 

முதல் நாள் ஷூட்டிங்கில் இருந்து  படப்பிடிப்பின் கடைசி நாள் வரை, என்னை நல்ல விதமாக உணரவைத்தீர்கள்.. 

யாரும் என்னை ஒதுக்காமல் இருப்பதற்கான உறுதியை கொடுத்தீர்கள். நீங்கள் படப்பிடிப்பில் இருந்த போதெல்லாம் எங்கள் அனைவரையும் மிகவும் நன்றாக பார்த்துக்கொண்டீர்கள். 

கப்பலில் நாம் ஒன்றாக அமர்ந்து உண்ட உணவுகள், நாம் அடித்த ஜோக்குகள் உள்ளிட்டவை சிறந்த  நேரமாக அமைந்தன. இப்படி பல்வேறு விஷயங்களில் ஆர்வம் கொண்ட மனிதரை நான் பார்த்ததே கிடையாது. 

உங்களுக்குள் இருக்கும் குழந்தைத்தனத்தை நான் மதிக்கிறேன்.குடும்பம், கார்கள், பயணம் மற்றும் பந்தயம் பற்றி நீங்கள் பேசும்போது உங்கள் கண்கள் பிரகாசிக்கும் விதம் எங்கள் கண்களுக்கு  இனிமையான காட்சியாக இருக்கும். 

உங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் நீங்கள் கவனித்து பாராட்டுகிறீர்கள். 

படப்பிடிப்பு தளத்தில் நீங்கள் காட்டும் பொறுமை மற்றும் அர்ப்பணிப்பு என்னைப் போன்ற இளம் நடிகர்களுக்கு ஊக்கமளிக்கும் ஒன்றாகும். உங்களுடன் செலவிட்ட ஒவ்வொரு நிமிடங்களும் சிறந்தவை. 

வாழ்க்கையில் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் நிலையாக இருக்க வேண்டும் என்பதை உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன். உங்களுடன்    பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததற்கும் நன்றிக்கடன் பட்டு இருக்கிறேன்.’ என்று பதிவிட்டு இருக்கிறார். 

பால் இல்லாமலே எலும்புகளை வலுவாக்கணுமா? கால்சியம் சத்து நிறைந்த இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க!