திரையுலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை யாஷிகா. பல திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகளில் பங்குபெற்றாலும், பிக்பாஸ் சீசன் 2 வும், ' ‘இருட்டு அறையில் முரட்டு குத்து ' என்ற அடல்ட் காமெடி படமும் இவரைப் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. 

By Kalyani Pandiyan S
Feb 18, 2025

Hindustan Times
Tamil

இந்த நிலையில் யாஷிகா ஆனந்த் தன்னுடைய ரசிகர் ஒருவர் செய்த செயலுக்கு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதில் கொடுத்திருக்கிறார்.

ஆம், யாஷிகாவின் ரசிகர் ஒருவர் அவரின் புகைப்படத்தை தன்னுடைய மார்பில் பச்சைக்குத்தி, அதனை சமூகவலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில், இதனைப்பார்த்த யாஷிகா ஆனந்த், எனது புகைப்படத்தை ரசிகர் ஒருவர் நெஞ்சில் பச்சை குத்திய புகைப்படத்தை பார்த்தேன். 

அவ்வாறு செய்த போது எவ்வளவு வலித்திருக்கும். ஏன் இப்படி செய்கிறீர்கள். உங்களது அம்மாவை சந்தோஷப்படுத்துங்கள். அதுதான் எனக்கு சந்தோஷம்.’ என்று பதிவிட்டு இருக்கிறார்.

யாஷிகா ஆனந்திடம் எம்.ஏ.பாலா எழுதி இயக்கும் X Ray கண்கள் மற்றும் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் டிடி நெக்ஸ்ட் லெவல் படங்கள் கைவசம் இருக்கின்றன.

முன்னதாக, கடந்த ஆண்டு சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் யாஷிகா சிக்கினார். 

அந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்திற்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் ஆறு மாதங்களாகச் சிகிச்சை பெற்று மீண்டார். 

பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட பருப்புகளில் அதிக சத்துக்கள் இருக்கின்றது. ஆனால் அதே போல நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் சத்துக்கள் அனைத்தும் வேர்க்கடலைகளிலும் இருக்கின்றன

Canva