இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்..பணப் பற்றாக்குறை இருக்காதாம்!
By Karthikeyan S Aug 10, 2024
Hindustan Times Tamil
குறிப்பட்ட 5 தேதிகளில் பிறந்த பெண் இயல்பாகவே பணம் சம்பாதிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்று எண் கணிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
எண் கணிதத்தின்படி பண விஷயத்தில் மிகவும் புத்திசாலியாக இருக்கும் பெண்களின் பிறந்த தேதி குறித்து பார்ப்போம்
பிறந்த தேதி 2 (அனைத்தும் மாதத்திலும் 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள்)
ஒரு மாதத்தில் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு எண் 2 ஆக உள்ளது. இந்த மூல எண்ணின் அதிபதி சந்திரன்
சந்திரனின் தாக்கத்தால் இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் புத்திசாலித்தனமான, உணர்ச்சிவசப்பட்ட மற்றும் முன்னோக்கி சிந்திப்பவர்களாக இருப்பார்கள்
இந்த தேதிகளில் பிறந்த பெண் குழந்தைகள் பிறவியிலேயே படைப்பாளிகளாகக் கருதப்படுகிறார்கள். இவர்களுக்கு அபாரமான சிந்திக்கும் திறன் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே புத்திசாலித்தனத்தால் மக்களை ஈர்க்கிறார்கள்.
பொதுவாக, அவர்களின் நிதி நிலை மிகவும் நன்றாக இருக்கும். அவர்களின் பல நேர்மறையான குணங்களில் செழிப்பு, செல்வம் மற்றும் நிதி புத்திசாலித்தனம் ஆகியவை அடங்கும்.
எண் கணிதத்தின் படி, கூட்டுத்தொகை எண் 2 தொடர்பான தேதிகளில் பிறந்த பெண்கள் மிகவும் கவர்ச்சிகரமானவர்கள். அவர்கள் தங்கள் வார்த்தைகளால் மற்றவர்களை ஊக்குவிக்கிறார்கள். பணம் சம்பாதிக்கும் கலை அவர்களுக்கு இயல்பாகவே இருப்பதாக கூறப்படுகிறது. இது அவர்களின் நிதி நிலையை வலுவாக வைத்திருக்கிறது.
வரும் 2025ஆம் ஆண்டில் திடீர் கோடீஸ்வர யோகம் பெரும் 7 ராசிகள்! பணத்தை மூட்டை கட்ட ரெடியா?