சீனிக்கிழங்கு சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Oct 24, 2024

Hindustan Times
Tamil

பாலிபினோலிக் சேர்மானங்கள் நிறைந்திருக்கும் சீனக்கிழங்கு கண்கள் மற்றும் கரு விழி ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கிறது

கரையக்கூடிய, கரையாத நார்சத்துக்களோடு ஆன்டிஆக்ஸிடன்ட்களும் இருப்பதால் செரிமானத்துக்கு உதவுவதோடு, மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது

இதில் இருக்கும் சிக்கலான கார்ப்போஹைட்ரேட்கள், குறைவான க்ளைசெமிக் குறியீடு உடலின் சர்க்கரை அளவை சீராக்குகிறது

வைட்டமின் சி, கார்டினாய்ட்கள், பினைல் புரொபனாய்ட்கள் வீக்கம் போன்ற நிலைமைகளுக்கு எதிராக செயல்படுகிறது. கீல் வாதம் பாதிப்பை தடுக்கிறது

குடல் புறணியை பராமரிக்கவும் மற்றும் தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகள் நுழைவதை தடுக்கவும் செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

இதில் இருக்கும் வைட்டமின் பி6 செரோடோனின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இதுவொரு நரம்பியக்கடத்தியாக மனநிலை மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் சீனிக்கிழங்கில் இருக்கும் ஆந்தோசயனின்கள் நினைவாற்றை பெருக்குகிறது

இதில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து செரிமானத்தை மெதுவாக்கி  நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தருவதன் மூலம் எடையிழப்புக்கு உதவுகிறது

அதிகப்படியான உடலின் சோடியம், கொலஸ்ட்ரால் அளவை சீராக்கி இதய நோய் பாதிப்பின் அபாயத்தை குறைக்கிறது

கர்ப்பிணி பெண்கள் மூன்றாவது ட்ரைமெஸ்டர் காலகட்டத்தில் சாப்பிடக்கூடிய உணவாக சீனிக்கிழங்கு இருக்கிறது. இதில் கருவின் வளர்ச்சிக்கு அடிப்படையாக உள்ளது

சீனிக்கிழங்கில் இருக்கும் வைட்டமின் சி, கொலஜென் உற்பத்தியை மேம்படுத்தி இளமையிலேயே முதுமை தோற்றம் ஏற்படுவதை தடுப்பதுடன், சருமத்தை பொலிவாக வைக்க உதவுகிறது

உங்கள் தொழில் நம்பிக்கையை அதிகரிக்க ஊக்கமளிக்கும் மேற்கோள்கள்

Photo Credit: Pexels