கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் பருக வேண்டிய பானமாக கரும்பு ஜூஸ் இருக்கிறது. கரும்பு ஜூஸ் குடிப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Oct 02, 2024

Hindustan Times
Tamil

கரும்பு ஜூஸில் கார்ப்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் இரும்பு, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் இருக்கின்றன. கரும்பு ஜூஸ் பிள்ளை பெற்ற தாய்மார்கள், குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு பல்வேறு நன்மைகள் தருகிறது

கர்ப்பம் தரித்த பெண்களுக்கு சளி, இருமல் பாதிப்பு உண்டானால் மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதற்கு பதிலாக கரும்பு ஜூஸ் பருகி இயற்கையான முறையில் அதற்கு தீர்வு காணலாம்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் துயரங்களில் முக்கியமானதாக மலச்சிக்கல் இருக்கிறது. இதில் போதிய அளவில் நார்ச்சத்து இருக்கிறது. இது குடல் இயக்கத்தை வெளிப்படுத்தி மலச்சிக்கலை தணிக்கிறது

குறைவான கலோரி உள்ளடக்கம் கொண்டிருக்கும் கரும்பு ஜூஸ் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது

கர்ப்பிணி பெண்களுக்கு அடிப்படை தேவையாக இருக்கும் ஃபோலிக் அமிலம் இதில் அதிகமாக உள்ளது. கருவில் உள்ள நரம்பு குழாய் குறைபாடுகளை போக்கும் அத்தியாவசிய ஊட்டசத்தாக உள்ளது

கரும்பு ஜூஸ்களில் வாந்தி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது குமட்டல், வாந்தி, காலை நேரத்தில் வரும் உடநலமின்மையை குறைக்கிறது

அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கருவையும், தாயையும் பல்வேறு நோய் தொற்று பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து, நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை வலுப்படுத்துகிறது

கரும்பு ஜூஸில் இருக்கும் வைட்டமின் சி வெள்ளை ரத்த செல்கள் உற்பத்தியை ஊக்கப்படுத்துகிறது. பாத்தோஜன்களுக்கு எதிராக உடல் பாதுகாப்பின் முதல் படிநிலையாக உள்ளது

கர்ப்ப காலத்தில் சரும நிறமியிலும் பாதிப்பு ஏற்படும்.  சருமத்தில் ஏற்படும் வறட்சி, நிறமூட்டல் போன்றவற்றுக்கு தீர்வு அளிக்கிறது

கரும்பு ஜூஸ்களில் இருக்கும் பினோலிக் அமிலம், பிளேவனாய்ட்கள், பொட்டாசியம் ரத்த அழுதத்தை நிலையாக வைக்க உதவுகிறது. ஆக்சிஜனேற்ற அழுத்தம், அழற்சி எதிராக போராடி தாய் மற்றும் சிசுவை பாதுகாக்கிறது

இந்த வாரம் (நவ.24-30) வரை 12 ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்ப்போம்