Ajith Kumar: சேலத்தைச் சேர்ந்த ரேசரான சாய் சஞ்சய் அஜித்துடன் நடந்த சந்திப்புக்குறித்து நெகிழ்ச்சியான பதிவொன்றை வெளியிட்டு இருக்கிறார்.
By Kalyani Pandiyan S Apr 14, 2025
Hindustan Times Tamil
அஜித் அண்ணன் இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் அவர், ‘நேற்றைய தினம் ரேஸ் டிராக்கில் அஜித் அண்ணனை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி.
இந்தியன் மோட்டார் விளையாட்டுக்குறித்து நாங்கள் நிறைய பேசினோம்.
கடந்த சனிக்கிழமை பயிற்சிக்கு முன்னர் அஜித் அண்ணன் என்னை தேடி வந்து வாழ்த்தினார்.
இது அவர் எவ்வளவு சிறந்த மனிதர் என்பதைக் காட்டுகிறது.’ என்று பதிவிட்டு இருக்கிறார்.
துபாயில் நடைபெற்ற 24 மணி நேர ரேசிங்கில் பங்குபெற்றார். அதில் அவரது அணி 3ம் இடத்தை பிடித்தது.
துபாயில் நடைபெற்ற 24 மணி நேர ரேசிங்கில் பங்குபெற்றார். அதில் அவரது அணி 3ம் இடத்தை பிடித்தது.
அதனை தொடர்ந்து தற்போது ஐரோப்பாவில் நடைபெற்று வரும் கார் ரேஸ் போட்டிகளில் பங்கெடுத்து வருகிறார். அதன்படி, நேற்றைய தினம் நடைபெற்ற ஜிடி4 கார் ரேஸ் போட்டியில் அஜித் ஒரே ஆளாக பங்கெடுத்தார். அங்குதான் இருவரும் சந்தித்துக்கொண்டிருக்கின்றனர்
ராகு பகவானின் கும்ப ராசி பயணத்தால் யோகத்தை பெற்ற ராசிகள்