யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்?  இட்லிகடை, இதயம் முரளி, பராசக்தி, எஸ்.டி.ஆரின் 49 உள்ளிட்ட படங்களைத் தயாரித்து, ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 500 கோடிக்கு மேல் முதலீடு செய்திருக்கும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் 2 வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

By Kalyani Pandiyan S
May 17, 2025

Hindustan Times
Tamil

சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஆகாஷ் ஈடுபட்டு வருவதாக, அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. 

இந்த நிலையில், நேற்றைய தினம் டாஸ்மாக் ஊழல் தொடர்பாக பல அதிகாரிகள் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, அத்துடன் தேனாம்பேட்டையில் உள்ள ஆகாஷ் வீட்டிலும் சோதனையை மேற்கொண்டது.

 இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாகவும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமலாக்கத்துறை திடீரென ஆகாஷ் வீட்டில் சோதனை நடத்த காரணம் இருக்கிறது. ஆகாஷூக்கு பூர்வீகம் சேலம். முன்னாள் முதல்வர் மு.க. கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகள் தேன்மொழி. இவரை கவின்கேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.கே. ரங்கநாதன் திருமணம் செய்திருக்கிறார். இவரின் இரண்டாவது மகளான தாரணியைதான் ஆகாஷ் திருமணம் செய்திருக்கிறார். 

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று தன்னுடைய அப்பாவும், PRR ஸ்வர்ண மாளிகை மற்றும் வேலவன் மோட்டார்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரானுமான பாஸ்கரனிடம் ஒரு குறிப்பிட்டத்தொகையை வாங்கிக்கொண்டு சேலத்தில் இருந்து சென்னை வந்த ஆகாஷ், பல திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்ததாக சொல்லப்படுகிறது.

கல்யாணத்திற்கு பின்னர் ஆகாஷ் சிவகார்த்திகேயனின் பராசக்தி, அதர்வாவின் இதயம் முரளி, எஸ்.டி.ஆரின் 49 வது படம் என பெரிய பட்ஜெட் திரைப்படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து, கிட்டத்தட்ட 500 கோடி அளவில் பணத்தை முதலீடு செய்தார்.

இந்த காலத்தில் பாஸ்கரனின் வேலவன் மோட்டார்ஸ் நிறுவன வாகனங்களும் கணிசமாக உயர்ந்ததாகவும், ஆகாஷ் தனியார் பள்ளி ஒன்றை சொந்தமாக்கியதாகவும் தகவல்கள் சொல்லுகின்றன. இப்படி கல்யாணம் முடிந்த 6 மாத காலங்களில் அபார வளர்ச்சி அடைந்திருக்கும் ஆகாஷூக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது? 

அவர் எங்கேனும் கடன் வாங்கி இருக்கிறாரா? உள்ளிட்ட கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நெய் ஏன் பயன்படுத்த வேண்டும் தெரியுமா..! இந்த 6 காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

image credit to unsplash