குட் பேட் அக்லி திரைப்படத்திலிருந்து வெளியான புலி புலி பாடல் இன்று இணைய உலகத்தை கலக்கிக்கொண்டிருக்கிறது. இந்தப்பாடலை எழுதி பாடியவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த டார்க்கி நாகராஜா.. இவர் யார் என்பதை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.
By Kalyani Pandiyan S Apr 10, 2025
Hindustan Times Tamil
இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், மேடை கலைஞர் என பல்வேறு முகங்கள் கொண்டவர் டார்க்கி நாகராஜா. இவர் மலேசியாவில் வசித்து வருகிறார். இவரது மனைவி மலர்விழி.
இவர்களுக்கு கரிஷ்மா மற்றும் லோகாம்பிகை நாகராஜா என இரு குழந்தைகள் இருக்கின்றனர். இவர் ‘தி கீஸ்’என்ற பெயரில் இசைக்குழுவை நடத்தி வைத்திருக்கிறார்.
ராக் இசை (இசை வடிவம்) பாடல்களை மைக்கேல் ஜாக்சன் போல நடனமாடி பாடுவதுதான் இவரின் ஸ்டைல்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் பணியாற்றி இருக்கும் டார்க்கிக்கு கபாலி படத்தில் இடம்பெற்ற ‘உலகம் ஒருவனுக்கா’, ‘அக்கா மக’, ‘மரவனா’, ‘மகாரீட்டா’ உள்ளிட்ட பாடல்கள் பெரு வெளிச்சத்தைக்கொண்டு வந்து சேர்த்தன.
இவற்றுடன் இவர் பாடிய புலி புலி மியூசிக் வீடியோ லட்சக்கணக்கான மக்கள் பார்த்து ரசித்து இருக்கிறார்கள்.
குட் பேட் அக்லி படத்தில் இவர் பாடிய புலி பாடல் பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது.
குட் பேட் அக்லி கலவையான விமர்சனங்களை பெற்றது.
பால் இல்லாமலே எலும்புகளை வலுவாக்கணுமா? கால்சியம் சத்து நிறைந்த இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க!