விலங்குகளின் கடியானது பல்வேறு ஆபத்துகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது. அந்த வகையில் எந்த விலங்குகளின் கடி மிகவும் வலுவானதாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Feb 05, 2025

Hindustan Times
Tamil

வளர்ப்பு பிராணியாக இருந்தாலும் சரி, வெளி இடங்களில் சுற்றி திரியும் விலங்குகள் ஆனாலும் சரி தப்பி தவறி கடித்துவிட்டால் பல உடல்நல பாதிப்புகளை சந்திக்க நேரிடும்

விலங்குகள் கடிக்கும் சக்தி PSI எனப்படும் ஒரு சதுர அங்குலத்துக்கு எவ்வளவு பவுண்ட்  என்ற அளவில் கணக்கிடப்படுகிறது

மனித கடி சக்தி சராசரி 162 PSI ஆகும். ஆனால் மற்ற விலங்குகளின் கடி சக்தியுடன் ஒப்பிடும்போது இதெல்லாம் ஒன்றுமில்லை

விலங்குகளின் ராஜ்ஜியத்தில் 5,000 PSI கடி விசையுடன் நைல் நதி முதலை வலிமையான கடிக்கான சாதனையைப் படைத்துள்ளது

வலிமையான கடிக்கான இரண்டாவது இடத்தில் அமெரிக்க அலிகேட்டர்கள் இருக்கின்றன. இதன் கடி விசை 2,125 PSI ஆகும்

1,800 PSI உடன் நீரியானையின் கடியானது மிகவும் சக்தி வாய்ந்ததாக உள்ளது

ஜாக்குவார் வலிமையான தாடைகளை கொண்டதாக உள்ளது. இதன் கடியானது 1,500 PSI ஆகும்

1,300 PSI கடி விசை கொண்டிருக்கும் கொரில்லாக்கள் எளிதாக பழங்கள், காய்கறிகளை கடித்து சாப்பிடுவதோடு, தன்னை தாக்குபவர்களிடமிருந்தும் தற்காத்து கொள்ளும்

துருவ கரடி அல்லது பனிக்கரடிகளின் கடி விசை  1,300 PSIஐ கொண்டுள்ளது. ஆர்டிக் துருவ பகுதிகளில் சக்தி வாய்ந்த வேட்டை விலங்குகளாக திகழ்கின்றன

கிரிஸ்லி கரடிகள் கடி விசை 1,160 PSIஐ கொண்டுள்ளது. இதன் கடியும் மிகவும் வலிமையானது

கழுதை புலி என்று அழைக்கப்படும் ஹைனா கடி விசையானது 1,100 PSIஐ ஆகும்

ஆண்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்னைகள் நீங்க என்ன உணவுகளை எடுக்கலாம்?