உங்கள் குழந்தைகளை ஒரு நல்ல மனிதராக மாற்ற நீங்கள் எப்போதெல்லாம் அவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளவேண்டும்

By Priyadarshini R
Apr 15, 2025

Hindustan Times
Tamil

நீங்கள் தெளிவாகவும், தெரடர்ச்சியாகவும் ஒரு விதியை வகுக்கும்போது, அது குழந்தைகளுக்கும் பிடிக்கத்தான் செய்யும். என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்துகொள்வது பாதுகாப்பு உணர்வு, பொறுப்பு மற்றும் மரியாதையைக் கொடுக்கிறது.

உங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் வயதுக்கு ஏற்ப வீட்டில் வேலைகளை பிரித்து கொடுத்துவிடவேண்டும். இதனால் அவர்களுக்கு பொறுப்பு, ஒருங்கிணைந்து வேலை செய்வது மற்றும் கடின உழைப்புக்கான பலன் ஆகியவைக் கிடைக்கிறது. 

உங்கள் குழந்தைகளின் திரை நேரத்துக்கான எல்லை என்பது மிகவும் முக்கியமானது. அது அவர்களின் கிரியேட்டிவிட்டி மற்றும் சமூகத்துடன் பழகுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. 

உங்கள் குழந்தைகளுக்கு ‘தயவுசெய்து’ மற்றும் ‘நன்றி’ என்ற இரண்டு வார்த்தைகளையும் கற்றுக்கொடுங்கள். இது மரியாதை மற்றும் அனுதாபத்தையும் கற்றுக்கொடுக்கும். 

உங்கள் குழந்தைகளுக்கு ‘இல்லை‘ என்ற வார்தையை ஏற்க கற்றுக்கொடுக்கவேண்டும். இது அவர்களுக்கு பொறுமை, உணர்வுகளைக் கட்டுப்படுத்த மற்றும் மீள் திறன் ஆகியவற்றை வளர்க்க உதவும்.

தொடர்ந்து ஒரே நேரத்தில் உறங்கச் செல்வது உடல், மனம் மற்றும் மூளை இயக்கத்துக்கு நல்லது. இது ஒழுக்கத்தை அதிகரிக்கிறது. மனஅழுத்தத்தைக் குறைக்கிறது. பள்ளியில் அவர்களின் திறனை அதிகரிக்கிறது. நாள் முழுவதும் அவர்கள் நல்ல பழக்கத்தைப் பழக உதவுகிறது.

குழந்தைகளை அவர்களின் நடத்தை அவர்களை பொறுப்பாக்குவது அவர்களிடம் நேர்மை மற்றும் தவறு செய்தால் அதை ஏற்கும் பக்குவத்தை அவர்களிடம் வளர்த்தெடுக்கும். 

இன்றைய தங்கம் விலை நிலவரம்: ‘மீண்டும் ஏற்றம்..’ ஏப்ரல் 18, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!