ஹெல்தியான கோதுமை லட்டு.. இனி சப்பாத்தி மிச்சம் இருந்தால் கூட கவலை வேண்டாம்!
By Pandeeswari Gurusamy Apr 13, 2025
Hindustan Times Tamil
தேவையான பொருட்கள் : கோதுமை மாவு, உப்பு, வெல்லம், ஏலக்காய், தேங்காய் துருவல், முந்திரி பருப்பு, உலர் திராட்சை
Pixabay
கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவை வழக்கம் போல் பிசைந்து எடுத்து கொள்ள வேண்டும்.
Pixabay
பின்னர் மாவை குறைந்தது அரை மணி நேரம் மூடி வைத்து பின்னர் வழக்கம் போல் நாம் சப்பாத்தி போட்டு எடுத்து கொள்ள வேண்டும்.
Pixabay
சப்பாத்தி லேசாக ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்து இரண்டு மூன்று பல்ஸ் விட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.
Pixabay
பின்னர் பொடித்து வைத்த வெல்லத்தை மிக்ஸியில் சேர்த்து லேசாக பவுடர் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் 3 ஏலக்காயை அளவிற்கு பொடி செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்தையும் நன்றாக கலந்து சேர்த்து பிரட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
Pixabay
பின்னர் வாணலியில் நெய்யை விட்டு அதில் விருப்பத்திற்கு ஏற்ப முந்திரி, உலர் திராட்சையை லோசாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் தேங்காய் துவலையும் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.
Pixabay
ஏற்கனவே அரைத்து வைத்த கலவையில் பிரட்டி எடுக்க வேண்டும். பின்னர் இளஞ்சூடாக இருக்கும் போதே லட்டு செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான் சுவையான கோதுமை லட்டு ரெடி. இதை நீங்கள் மீதம் உள்ள சப்பாத்தியை வைத்து கூட செய்யலாம்.
Canva
சர்க்கரையே இல்லாமல் டேஸ்டான ஐஸ்கிரீம் செய்து கோடையை கொண்டாடலாமா!