வாயில் வைத்ததும் வழுக்கி கொண்டு செல்லும் கோதுமை அல்வா.. வெறும் 4 பொருள் போதும்!
Canva
By Pandeeswari Gurusamy Mar 25, 2025
Hindustan Times Tamil
தேவையான பொருட்கள்: கோதுமை மாவு - ஒரு கப், தண்ணீர் - இரண்டு கப், சர்க்கரை - ஒரு கப், நெய் - அரை கப், முந்திரி பருப்பு - ஒரு கைப்பிடி
Canva
முதலில், ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சர்க்கரையைச் சேர்க்கவும். அதனுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, சர்க்கரை நன்கு கலந்து சிரப் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
Canva
இப்போது மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் சேர்க்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து, எடுத்து தனியாக வைக்கவும்.
Canva
மீதமுள்ள நெய்யுடன் கோதுமை மாவைச் சேர்த்து நன்கு கலக்கவும். கட்டிகள் உருவாகாமல் ஒரு ஸ்பேட்டூலாவுடன் கலக்க வேண்டும்.
Canva
கோதுமை மாவில் நெய் நன்கு கலந்த பிறகு, முன்பு தயாரித்த சர்க்கரை பாகை சேர்த்து நன்கு கலக்கவும்.
Canva
அல்வா கடாயில் ஒட்டாமல் வரும் போதும் அதில் வறுத்த முந்திரி பருப்பைச் சேர்த்து, நன்கு கலந்து, அடுப்பை அணைத்தால் சூடான கோதுமை அல்வா தயார்.
Canva
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது மிகவும் பிடிக்கும். மிக எளிதாக செய்ய முடியும். விருந்தினர்களுக்கு ஈசியாக செய்து தரக் கூடிய ஒரு ஸ்வீட் ரெசிபி இது
Canva
கோடைக் காலத்தில் நாம் சாப்பிடும் காலை உணவே அந்த நாள் முழுவதும் தேவைப்படும் ஆற்றலை தருகிறது. கோடைக் காலத்தில் சாப்பிட எளிதான காலை உணவுகளை இங்கு காண்போம்.